இந்தியா

காஷ்மீர் தொகுதி மறுவரையறை தேர்தல் ஆணையம் ஆலோசனை

செய்திப்பிரிவு

புதுடெல்லி

காஷ்மீரில் எல்லைகளை மாற்றி தொகுதிகளை மறுசீரமைப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் நேற்று ஆலோசனை நடத்தியது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ மத்திய அரசு நீக்கியது. மேலும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரு யூனியன் பிர தேசங்களாகவும் மாற்றி இது தொடர்பான மசோதா நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, காஷ்மீர் மாநிலத்தின் எல்லைகள் மாற்றியமைக்கப் படும். காஷ்மீரில் இப்போது குடி யரசுத் தலைவர் ஆட்சி நடக்கி றது. விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்கு முன்னதாக காஷ்மீர், லடாக் பகுதிகளில் தொகு திகள் மறுவரையறை செய்யப் பட்டு பிறகு தேர்தல் நடத்தப்படும்.

இந்நிலையில், காஷ்மீர் தொகு திகள் மறுவரையறை தொடர்பாக நேற்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. காஷ்மீர் சட்டப் பேரவையில் இப்போது 107 இடங் கள் உள்ளன. இவற்றை 114 இடங் களாக அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது. அதிகரிக்கப்படும் 7 இடங்கள் ஜம்மு பகுதியில் சேர்க் கப்படும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.

காஷ்மீர் சட்டப்பேரவைக்கு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத் தில் தேர்தல் நடத்தப்படும் என்று முன்பு கூறப்பட்டது. ஆனால், தொகுதி மறுவரையறை செய்வ தற்கு சில மாதங்கள் தேவைப்படும். மேலும், நவம்பர் மாதத்துக்கு பின் கடும் பனிப் பொழிவு இருக்கும் என்பதால் இந்த ஆண்டு தேர்தல் நடக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT