கேரளாவில் பலத்த மழை பெய்து வருவதால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தனது கடையில் இருந்த அனைத்து துணிகளையும் வழங்கிய நவ்ஷாத்தை நேற்று பாராட்டும் பொதுமக்கள். 
இந்தியா

கேரளாவின் ஹீரோவான நடைபாதை வியாபாரி

செய்திப்பிரிவு

கொச்சி

கேரளாவின் கொச்சி நகரில் உள்ள பிராட்வே பகுதியில் துணி வியாபாரம் செய்பவர் நவ்ஷாத். நடைபாதை வியாபாரியான இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கேரளாவில் வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு 10 மூட்டை புதிய துணிமணிகள் கொடுத்து உதவியுள்ளார். துணிகளை சேகரித்த தன்னார்வலர்கள் இதனை வீடியோ படம் பிடித்து சமூக வலைதளங் களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வலைதளங்களில் வைரலா கியது. கேரளாவின் ஹீரோ என மக் கள் இவரை புகழ்ந்து வருகின்றனர்.

பக்ரீத் பண்டிகை வியாபாரத்துக் காக புதிய துணிகளை நவ்ஷாத் வாங்கி வைத்திருந்தார். வெள்ளத் தால் பாதிக்கப்பட்டோருக்கு மக்கள் உதவத் தயங்குவதைக் கண்டு, தன்னார்வலர்களை தனது கிடங்குக்கு அழைத்து அனைத்து துணிகளையும் வழங்கியுள்ளார்.

நடிகர் ராஜேஷ் தலைமை யிலான தன்னார்வலர்கள் குழு, இந்த துணிகளை சேகரிக்கும்போது அதனை படம் பிடித்து சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளது. “இறக்கும்போது யாரும் எதையும் கொண்டு செல்லமுடியாது. கஷ்டப் படுவோருக்கு உதவும்போது அதற்கான பலனை நான் பெறுவேன்” என்றார் நவ்ஷாத்.

SCROLL FOR NEXT