இந்தியா

திருப்பதி ஏழுமலையானுக்கு 2 பிரம்மோற்சவம்

செய்திப்பிரிவு

உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவம் நடைபெறும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

வரும் செப்டம்பர் 16-ம் தேதி முதல் 24 வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழாவும், அக்டோபர் மாதம் 14-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழாவும் மிகவும் கோலாகலமாக நடைபெறும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

பிரம்மோற்சவம் நடைபெறும் நாட்களில் ஏழுமலையானை தரிசிப்பதற்காக வழக்கத் துக்கும் அதிகமாக பக்தர்கள் வருவது வழக்கம். இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவங்கள் நடைபெற இருப்பதால் அதிக அளவில் பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் கோதா வரி மகாபுஷ்கரம் விழாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் உயிரிழந்தனர். அது போன்ற நிகழ்வுகள் ஏதும் நடைபெறாத வகை யில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதையொட்டி நேற்று முதல், திருப்பதி ஏழுமலையான் கோயிலின் நான்கு மாட வீதிகளிலும் இரும்புக் கம்பிகள் பதிக்கும் பணி தொடங்கி உள்ளது. மாட வீதிகளில் நடை பெறும் வாகன உற்சவத்தின்போது பக்தர்க ளிடையே தள்ளுமுள்ளு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரம்மோற்சவம் நடை பெறும் நாட்களில் அனைத்து சேவைகளை கள், முன்பதிவு முறைகளை ரத்து செய்துள்ள தாகவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT