இந்தியா

அண்டை வீட்டார்களின் கேலி, கிண்டல், வசை: மனமுடைந்து தூக்கில் தொங்கிய பலாத்காரப் பாதிப்புச் சிறுமி 

செய்திப்பிரிவு

கான்பூர் (உ.பி) : பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி உத்தரப் பிரதேச சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர். தன்னைப் பலாத்காரம் செய்தவர்களை போலீஸார் கைது செய்யவில்லை என்ற வெறுப்பில் சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இதோடு மட்டுமல்லாமல் அண்டை வீட்டார் இந்தச் சிறுமியை கேலியும் கிண்டலும் வசையும் செய்துள்ளனர். இதனையடுத்து சிறுமி தூக்கில் தொங்கியதாகவும் குடும்ப உறுப்பினர்கள் போலீஸார் இடத்தில் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூலை 13ம் தேதி 3 பதின்ம வயது இளைஞரக்ள் இந்த 13 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில் அந்தச் சிறுமி வெள்ளிக்கிழமை இரவு தன் அறையில் தூக்கில் தொங்கியதாகக் கூறப்படுகிறது. அவரது உடல் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று நகர போலீஸ் உயரதிகாரி ராஜ்குமார் அகர்வால் தெரிவித்தார். ஆனால் தற்கொலைக் குறிப்பு எதுவும் கண்டெடுக்கப்படவில்லை.

பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கவுன்சிலிங் அளிக்க வேண்டும் என்றும் மனவளப்பயிற்சிக்கு அனுப்பப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் சிறுமியை அண்டை வீட்டார் கேலியும் கிண்டலும், வசையும் செய்தது இந்த துயரத்தில் போய் முடிந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் சாடியுள்ளனர்.

இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, மூத்த அதிகாரிகள் சிறுமியின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சத்யதேவ் சர்மா, உமேஷ் குமார், உர்மித் சிங், சஞ்சிவ் கவுதம் ஆகிய 5 போலீஸார் கடமையில் அலட்சியம் காட்டியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக 2 அண்டை வீட்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமி ஜூலை 13ம் தேதி வாசிஃப், வாசிஃபின் சகோதரர் வசாஃப் இவர்களது நண்பர் ஷியாமு என்கிற சம்மு ஆகியோர் கடத்திச் சென்று பலாத்காரம் செய்ததாக எஸ்.பி. தெரிவித்தார்.

மறுநாள் தங்கள் பெற்றோரிடம் சிறுமி தனக்கு நடந்த கொடுமையை தெரிவித்துள்ளார். இதனையடுத்த புகாரின் பேரில் ஜூலை 27ம் தேதிதான் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது, இந்நிலையில் அந்தச் சிறுமி வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-பிடிஐ

SCROLL FOR NEXT