இந்தியா

வியாபம் முறைகேடு: மருத்துவ மாணவி மர்ம மரணம் குறித்து மீண்டும் விசாரணை

பிடிஐ

நம்ரதா தேமர் என்ற மருத்துவ மாணவியின் மர்ம மரண விவகாரத்தை மறு விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது மத்திய பிரதேச போலீஸ்.

வியாபம் முறைகேட்டில் இந்த மாணவி பெயர் அடிபட்டதையடுத்து இவர் 2012-ம் ஆண்டு உஜ்ஜயினியில் ரயில்வே பாதை அருகே மர்மமான முறையில் இவரது உடல் கிடந்தது.

நம்ரதாவின் தந்தையை பேட்டி கண்ட டிவி நிருபர் அக்‌ஷய் சிங்கின் ‘திடீர் மரணத்தை’ அடுத்து இப்போது நம்ரதாவின் மர்மமான மரணத்தை மறுவிசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது மத்திய பிரதேச போலீஸ்.

45 மரணங்கள்: வியாபம் முறைகேட்டை அம்பலப்படுத்தியவர்களில் ஒருவரான தடய அறிவியல் நிபுணர் பிரசாந்த் பாண்டே, “சிபிஐ விசாரணை தேவை. குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் திடீரென ஒரே விதத்தில் மர்ம மரணம் அடைகின்றனர் என்றால் இதில் வேறேன்னவோ நடக்கிறது என்று பொருள்” என்றார்.

நம்ரதா மரணத்தை முதலில் கொலை என்று புகார் பதிந்த மத்திய பிரதேச போலீஸ், திடீரென அது ஒரு விபத்து என்று முடிவு கட்டி விசாரணையையும் மூட்டை கட்டியது.

நம்ரதா இந்தூர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். இவர் வியாபம் முறைகேட்டில் ஈடுபட்ட கும்பல் மூலம் மருத்துவக் கல்லூரி சீட்டை பெற்றிருக்கலாம் என்று இப்போது சந்தேகம் எழுந்துள்ளது.

கடும் அழுத்தங்களுக்குப் பிறகு மத்திய பிர்தேச முதல்வர் சவுகான் நேற்று சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT