காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டிருப்பதால் அந்த மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதன்காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்ல ஜம்மு ரயில் நிலையத்தில் நேற்று ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். படம்: பிடிஐ 
இந்தியா

காஷ்மீர் விவகாரத்தில் சமூகவலைதளங்களில் வலம்வரும் போலி பதிவுகள் கண்காணிப்பு: நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை உத்தரவு

செய்திப்பிரிவு

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி

கடந்த திங்கள்கிழமை ஜம்மு-காஷ்மீர் மீதான சிறப்பு அந்தஸ்து களான 370 மற்றும் 35-ஏ பிரிவு களை மத்திய அரசு அகற்றி இருந் தது. அசம்பாவிதங்கள் நேர்ந்து விடாதபடி ஜம்மு-காஷ்மீரில் பாது காப்பு நடவடிக்கைகள் பலப் படுத்தப்பட்டுள்ளன.

இதையும் மீறி சமூக வலைதளங் களில் வெளியாகும் போலியான பதிவுகளால் பலசமயம் அமைதி சூழல் குலையும் ஆபத்துக்கள் ஏற்படுகின்றன. இதை தடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதிலும் உள்ள மத்திய பாதுகாப்பு போலீஸாருக்கு ஒரு அவசர உத்தரவு இட்டுள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் மத்திய உள்துறை அமைச்சக வட்டாரம் கூறும்போது, ‘‘சமூக வலைதளங்கள் மீதான புகார்களில் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுப்பதில்லை என உளவுத்துறையினர் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மாநிலங்களில் முகாமிட்டுள்ள மத்திய பாதுகாப்பு படையினரே தீவிரமாகக் கண்காணித்து அப் பதிவுகளை அனுப்பியவர் மீது உடனடியாக உரிய சட்டப்பிரிவு களில் நடவடிக்கை எடுக்க உத்தர விடப்பட்டுள்ளது’’ எனத் தெரி வித்தன.

போலி பதிவுகளால் தன் மாநிலத்திற்கு வெளியே நாடு முழுவதிலும் தங்கி உள்ள காஷ் மீரிகளுக்கும் பிரச்சனை உருவாகி விடுகிறது. இதன் மீதான புதிய உத்தரவுகளை பிறப்பித்தமைக்காக மத்திய அரசு மீதும் பல்வேறு தவறானப் பதிவுகள் முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சுற்றிவரு கின்றன.

இதனால் ஜம்மு-காஷ்மீரில் ஏற்படும் கலவரச் சூழலை சமாளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதற்காக மாநிலங்களில் செயல்படும் மத்திய உளவுத்துறையின் பிரிவுகள் உதவி புரியும்.

இதுபோல், சமூக வலைதளங் கள் மீதான மத்திய பாதுகாப்பு படைகளின் நடவடிக்கை புதிதல்ல. கும்பல் படுகொலை நிகழும் மாநிலங்களில் முதன்முறையாக மத்திய பாதுகாப்பு படைகள் இப் பணிக்காக முடுக்கி விடப்பட்டன.

இதில், பலர் மீது வழக்குகள் பதிவாகி நடவடிக்கை எடுக்கப் பட்டது. இந்த புகாரில் சிக்கியவர்கள் மீது ஐபிசி 505 பிரிவில் வழக்கு பதிவாகிறது. இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மூன்று வருடம் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. சிலருக்கு அப ராதத்துடனான சிறைத் தண்டனை யும் அளிக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT