இரா.வினோத்
பெங்களூரு
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வரு வதால் தமிழகத்துக்கு வினாடிக்கு 1 லட்சத்து 2 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர மக்கள் பாது காப்பான இடங்களுக்கு செல்லு மாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வட கர்நாடகாவில் கடந்த இரு வாரங்களாக கனமழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.இதுபோல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, தலக்காவிரி, பாகமண்டலா, மைசூரு, ஷிமோகா, ஹாசன் உள்ளிட்ட இடங்களிலும் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. விடிய விடிய கொட்டித்தீர்க்கும் கனமழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ண ராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்துள்ளது.
மேலும் கேரள மாநிலம் வய நாட்டில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருவதால் கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளது. இதனால் மைசூருவில் உள்ள கபினி அணைக்கு வரும் நீரின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு 23 ஆயிரம் கன அடி நீர் வந்த நிலையில் நேற்று ஒரு லட்சம் கன அடியை தாண்டியது.
இதனால் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட் டம் 2,282.25 அடியாக உயர்ந் துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி,வினாடிக்கு 90 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் திறக்கப் பட்டுள்ளது. இதுபோல் கிருஷ்ண ராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக தமிழகத் துக்கு 1 லட்சத்து 2 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் திறக்கப்பட் டுள்ளதால், ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடக அரசு வெள்ள அபாய எச் சரிக்கை விடுத்துள்ளது. மைசூரு, மண்டியா, ராம்நகர், சாம்ராஜ்நகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்துக்கு திறக்கப்பட் டுள்ள காவிரி நீர் நேற்று மாலை இரு மாநில எல்லையில் உள்ள பிலிகுண்டுலு அளவை நிலை யத்தை கடந்தது. இதனால் ஒகே னக்கல் அருவிகளில் வெள்ளம் கொட்டும் சூழல் உருவாகியுள்ள தால், அருவிகளில் குளிக்க சுற் றுலாப் பயணிகளுக்கு தடை விதிக் கப்பட்டுள்ளது. பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.