கேரள மாநிலம் கொச்சியில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பென்சன், பென்சி ஆகியோர் அவர்கள் பயின்ற தனியார் பள்ளியிலிருந்து 2003-ல் வெளியேற்றப்பட்டனர். அந்தக் குழந்தைகளுக்கும் எய்ட்ஸ் நோய் ஏற் பட்டிருப்பதால் மற்றவர்களுக்கும் இது பரவிவிடும் என்ற அச்சத்தின் காரணமாக, இந்த ஈவு இரக்கமற்ற நடவடிக்கையை அப்பள்ளி நிர்வாகம் மேற்கொண்டது.
இந்த தகவல் தெரியவந்ததை அடுத்து, அப்போதைய மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வ ராஜ்,நேரடியாக கொச்சிக்கு சென்று அந்தக் குழந்தைகளை கட்டியணைத்து முத்தமிட்டார். தொடுவதாலும், முத்தமிடு வதாலும் எய்ட்ஸ் நோய் பரவாது என் பதை உணர்த்துவதற்காக சுஷ்மா அவ்வாறு செய்தார். இந்த சம்பவத்துக்கு பிறகு, அந்தக் குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.