புதுடெல்லி
கடந்த 2015-ல் சுஷ்மா ஸ்வராஜின் தொடர் முயற்சியால் பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பிய கீதா தனது பாதுகாவலர் மற்றும் தாயை இழந்துவிட்டதாக கூறியுள்ளார்.
இந்தியாவிலிருந்து வழிதவறி தனது 7 வயதில் பாகிஸ்தான் சென்றவர் கீதா. எடி என்ற தொண்டு நிறுவனம் அவரை வளர்த்து வந்தது. 15 ஆண்டுகளுக்கு பிறகு அவரை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது, கடந்த 2015-ல் அதற்கான தொடர் முயற்சி யில் அப்போதைய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஈடுபட்டு அதில் வெற்றி பெற்றார்.
கீதா நாடு திரும்பிபோது, இந்தியாவின் மகளே வருக என வரவேற்றார். “கீதா தனது பெற்றோரை சந்திக்க முடியாவிட் டாலும் அவரை பாகிஸ்தானுக்கு திரும்ப அனுப்ப மாட்டோம். இந் திய அரசு அவரை தத்து எடுத்துக் கொள்ளும்” என சுஷ்மா அறிவித் தார்.
கீதா தற்போது ம.பியின் இந்தூரில் மாற்றுத்திறன் குழந்தை களுக்கு ஒரு தொண்டு நிறுவனம் நடத்தும் கல்வி நிறுவனத்தில் தங்கி படித்து வருகிறார். கீதாவின் நலனில் தொடர்ந்து அக்கறை எடுத் துக் கொண்ட சுஷ்மா, அவருக்கு திருமணம் செய்துவைக்கவும் முயற்சி எடுத்தார்.
இந்நிலையில் கீதா தங்கியிருக் கும் தொண்டு நிறுவன விடுதி வார்டன் சந்தீப் பண்டிட் நேற்று கூறும்போது, “சுஷ்மாஜி இறந்த தகவலை காலையில் கீதாவிடம் கூறினோம். அப்போது முதல் கீதா மிகவும் வருத்தமாக இருக்கிறார். கண்ணீர் வடிக்கிறார். நாங்கள் அவ ருக்கு ஆறுதல் கூறினோம். தனது பாதுகாவலரை இழந்துவிட்டதாக கீதா சைகை மொழியில் கூறினார். சுஷ்மா ஒரு தாயை போல தனது நலன் குறித்து எப்போதும் கவலைப்பட்டதாக கூறினார். தனது பிரச்சினைகள், படிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து சுஷ்மா அவ்வப்போது பேசிவந்த தாக கீதா கூறினார்” என்றார்.