இந்தியா

சுஷ்மா ஸ்வராஜ் மறைவு: மாநிலங்களவை அஞ்சலி

செய்திப்பிரிவு

புதுடெல்லி

மாரடைப்பால் காலமான முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு மாநிலங்களவை இன்று அஞ்சலி செலுத்தியது.

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜுக்கு நேற்றிரவு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது மறைவுக்கு இன்று மாநிலங்களவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இரங்கல் குறிப்பை வாசித்தார்.

வெங்கய்ய நாயுடு தனது இரங்கல் குறிப்பின்போது, ''முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்றிரவு மறைந்தார். அவரது மறைவு பேரிழப்பாகும். சுஷ்மா ஸ்வராஜுக்கு மாநிலங்களவை அஞ்சலி செலுத்துகிறது.

சுஷ்மா ஸ்வராஜ் என் சகோதரியைப் போன்றவர். என்னை அண்ணா என்றுதான் அழைப்பார். ஒவ்வோராண்டும் ரக்ஷா பந்தன் அன்று எனக்கு அவர் ராக்கி கட்டிவிடுவார்'' என்று குறிப்பிட்டார்.

- பிடிஐ

SCROLL FOR NEXT