இந்தியா

என்டிடிவி ரவீஷ்குமாருக்கு மகசேசே விருது: ‘தி இந்து’ குழுமத்தின் என்.ராம் வாழ்த்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி

ஊடகவியலில் சாதாரண மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க சிறந்த முறையில் பணியாற்றி வருவதால், மதிப்புமிக்க மகசேசே விருதுக்கு என்டிடிவி.யின் ஊடகவியலாளர் ரவீஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளார்.

பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் மறைந்த ரமோன் மகசேசே நினைவாக ஆண்டுதோறும் மகசேசே விருது வழங்கப்படுகிறது. அரசு பணி, பொது சேவை, சமூக தலைமை, இலக்கியம் மற்றும் இதழியல், அமைதி, வளரும் தலைமை ஆகிய 6 துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. ‘ஆசியாவின் நோபல்’ என்று மகசேசே விருது புகழப்படுகிறது.

இந்நிலையில், 2019-ம் ஆண்டுக் கான மதிப்புமிக்க மகசேசே விருதுக்கு 5 பேர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். அவர்களில் என்டிடிவி ஊடகவியலாளர் ரவீஷ் குமாரும் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ரமோன் மகசேசே விருது அறக்கட்டளை கூறும்போது, ‘‘என்டிடிவி ரவீஷ் குமார் நடத்தும் ‘பிரைம் டைம்’ நிகழ்ச்சி சாதாரண மக்களின் பிரச்சினைகளையும் அதற்கான தீர்வுகளையும் வெளிப் படுத்துகிறது. உண்மையான வாழ்க் கையை எடுத்துரைக்கும் விதத்தில் அவரது பிரைம் டைம் நிகழ்ச்சி அமைந்துள்ளது’’ என்று பாராட்டு தெரிவித்துள்ளது.

மேலும், ஊடகத் துறையில், “குரலற்றவர்களின் குரலாக’’ இருப்பதால் மகசேசே விருதை வென்றுள்ளார் என்று அந்த அறக் கட்டளை தெரிவித்துள்ளது. மக்களின் குரலாக நீங்கள் மாறி னால், நீங்கள்தான் சிறந்த இதழிய லாளர் என்றும் தெரிவித்துள்ளது.

ரவீஷ் குமார் தவிர மகசேசே விருதுக்கு மியான்மரின் கோ சுவீ வின், தாய்லாந்தின் அங்கனா நீலாபைஜித், பிலிப்பைன்சின் ரேமுண்டோ புஜான்டி கயாபியாப், தென் கொரியாவின் கிம் ஜாங்-கி ஆகிய 4 பேரும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

கடந்த 1996-ம் ஆண்டு முதல் என்டிடிவி.யில் ரவீஷ்குமார் பணி யாற்றி வருகிறார். இவர் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர். டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்தவர். சாதாரண மக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து தனது நிகழ்ச்சியில் துணிச்சலாக பேசி வருவதால், பல்வேறு மிரட்டல் களுக்கு ஆளானவர்.முன்னதாக ஆர்.கே.லஷ்மண், பி.சாய்நாத், அருண் ஷோரி, கிரண் பேடி, அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோரும் மகசேசே விருது பெற்றுள்ளனர்.

இதுகுறித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறும் போது, ‘‘மகசேசே விருது கிளப்பில் உங்களை (ரவீஷ் குமார்) வரவேற் கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

மகசேசே விருதுக்கு தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள ரவீஷ் குமாருக்கு, ‘தி இந்து’ குழுமத்தின் என்.ராம் வாழ்த்துத் தெரிவித்துள் ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘உங்களுடைய துணிச்சலான பணிக்கு, சுதந்திரமான மக்கள் சார்ந்த இதழியல் பணிக்கு கிடைத்த அங்கீகாரத்துக்கு வாழ்த்துகள் ரவீஷ் குமார். என்டிடிவி.க்கு வாழ்த் துகள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT