டெல்லியில் அமைந்துள்ள சிபிஐயின் (மத்திய புலானாய்வு மையம்) தலைமை அலுவலகத்தில் இன்று காலை (சனிக்கிழமை) சிறிய தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. 7 வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை. பெரிய அளவிலான சேதம் ஏதும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.