பயணிகளின் தேவையை பூர்த்தி செய்வதற்காக எக்ஸ்பிரஸ் ரயில் களில் இணைக்கப்படும் பெட்டி களின் எண்ணிக்கையை 24-லிருந்து 26 ஆக உயர்த்த ரயில்வே நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. இதன் மூலம் பயணிகளுக்கு கூடுதல் படுக்கை வசதி கிடைக்கும்.
நீண்ட ரயில்களை நிறுத்துவ தற்கு போதுமான நீளத்தில் நடை மேடை வசதி உள்ள 5 வழித்தடங் களில் மட்டும் முதல்கட்டமாக இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் வெளிப்படையாக தெரிவிக்க முன்வராத போதிலும், டெல்லி-ஹவுரா, டெல்லி-மும்பை ஆகிய வழித்தடங்களில் இயங்கும் ராஜ்தானி விரைவு ரயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்தத் திட்டத்துக்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பச்சைக் கொடிகாட்டியதும் இதுபற்றிய முறையான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறு. இதன்மூலம், முன்பதிவில் பயணிகளுக்கான படுக்கை வசதி சுமார் 100-இலிருந்து 150 வரை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து ரயில்வே அதிகார வட்டாரத்தினர் கூறும்போது, “இப்போது பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப விரைவு ரயில்களில் 18 முதல் 24 வரை பெட்டிகள் வரை இணைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதை அதிகரிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான வழித்தடங்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றனர்.
2015-16-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்படி பயணிகள் போக்கு வரத்து வருவாய் நடப்பு நிதி ஆண்டில் 16.7 சதவீதம் (ரூ.50,175 கோடி) உயரும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிப் பதற்காக, ரயில்வே நிர்வாகம் பல்வேறு ரயில்களில் கூடுதலாக 130 பெட்டிகளை இணைத்தது. மேலும் சிறப்பு ரயில்களையும் இயக்கியது.