இந்தியா

கருப்புப் பண தகவல் 2017-ல் கிடைக்கும்

செய்திப்பிரிவு

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் தொடர்பான விவரங்கள் 2017-ம் ஆண்டிலிருந்து இந்திய அரசுக்கு கிடைக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா, ஸ்விட்சர்லாந்து உள் ளி்ட்ட 45 நாடுகள், வரி விவரங் களை பரிமாறிக்கொள்ள ஒப்புக் கொண்டுள்ளன.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (ஓ.இ.சி.டி) ஆதரவு டன் இதற்கான உடன்பாடு கடந்த வாரம் எட்டப்பட்டது.

எனினும், வரி தொடர்பான விவரங்கள் உடனடியாக கிடைக் காது என கூறப்படுகிறது. சம்பந்தப் பட்ட வங்கிகளில் அதற்கான கட்டமைப்புகளை உருவாக்குதல், இந்த உடன்பாட்டிற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட நாடுகளில் சட்ட மியற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதே இதற்கு காரணமாகும். குறைந்து 2017-ம் ஆண்டிலிருந்துதான் வரி தொடர்பான தகவல்களை நாடுகள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ள முடியும்.

இந்த உடன்பாட்டில் கையெழுத் திட்டுள்ள நாடுகளில் உள்ள வங்கிகளில், வெளிநாட்டினர் வைத் திருக்கும் கணக்குகள் மற்றும் அதில் டெபாசிட் செய்யப்படும் தொகை உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.

எனவே, இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்து ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் வங்கி களில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளோரின் விவரங்களை தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஓ.இ.சி.டி. அமைப்பின் வரிக் கொள்கை மற்றும் நிர்வாக மைய இயக்குநர் பாஸ்கல் செயின்ட் அமான்ஸ் கூறுகையில், “வரி விவரங்கள் தொடர்பாக உலக அளவில் தரப்படுத்தும் பணி, வரும் செப்டம்பர் மாதம்தான் இறுதி செய்யப்படும்.

பின்னர், அது தொடர்பாக சம்பந்தப்பட்ட நாடுகளிடம் பேச்சு நடத்தி ஒப்புதல் பெறப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT