பிடிடி ஆச்சார்யா : கோப்புப்படம் 
இந்தியா

அரசமைப்புச் சட்டம் 370 பிரிவை ரத்து செய்த அறிவிப்பில் இன்னும் தெளிவு அவசியம்: மக்களவை முன்னாள் செயலாளர் கருத்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட அரசமைப்புச்சட்டம் 370 சிறப்புப் பிரிவை ரத்து செய்யும் மத்திய அரசு முடிவு குறித்த அறிவிப்பில் நீண்ட வார்த்தைகள் இருப்பதைக் காட்டிலும் இன்னும் தெளிவான விளக்கங்கள் இருப்பது அவசியம் என்று மக்களவை முன்னாள் செயலாளர் பிடிடி ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

கடந்த 1954-ம் ஆண்டு அரசமைப்புச்சட்டம் 370 பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு உரிமை அந்தஸ்தை மத்தியஅரசு இன்று ரத்து செய்தது. அதற்கான தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொண்டு வந்தார். நீண்ட விவாதத்துக்குப்பின் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தின்படி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட உள்ளது. சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக்கும், சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீரும் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்களவையின் முன்னாள் செயலாளர் பிடிடி ஆச்சார்யா  நிருபர்களுக்கு இன்று அளித்த பேட்டியில், "அரசமைப்புச் சட்டம் 370 பிரிவை திரும்பப் பெறுவதற்கு குடியரசுத் தலைவருக்குதான் அதிகாரம் இருக்கிறது. அரசமைப்புச்சட்டம் 370 பிரிவில் மாற்றங்கள் கொண்டுவந்து மத்தியஅமைச்சர் அமித் ஷா தீர்மானம் அறிமுகம் செய்தார்.

ஆனால், அரசாணை குறித்த அறிவிப்புக்கும், அதை எவ்வாறு செயல்படுத்தும் முறைக்கும் இடையே அதிகமான விளக்கம் இருப்பது அவசியம். அரசமைப்புச்ச ட்டம் 370 பிரிவை திரும்பப் பெறும்போது, அதனோடு சேர்ந்த அனைத்துப் பிரிவுகளும் எடுத்துக் கொள்ளப்பட்டுவிடும். இதன்படி இந்த மாநிலம் இனிமேல் மத்திய அரசின் கீழ் நிர்வகிக்கப்படும் அங்கு சட்டப்பேரவை இருக்காது. இருந்தபோதிலும்கூட செய்யப்பட்ட திருத்தங்களில் இன்னும் அதிகமான தெளிவு இருந்திருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

ஐஏஎன்எஸ்

SCROLL FOR NEXT