இந்தியா

இந்தியாவின் பொருளாதார மந்தநிலை தற்காலிகமானதுதான்: முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் பிமல் ஜலான் கருத்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி

தற்போது இந்தியா எதிர் கொண்டிருக்கும் பொருளாதார மந்தநிலை தற்காலிகமானதே. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இந்தி யாவின் பொருளாதாரம் சீரான வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் என்று முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் பிமல் ஜலான் தெரிவித் துள்ளார்.

கடந்த சில மாதங்களில் மத்திய அரசு பல்வேறு பொருளாதார சீர் திருத்தங்களை அறிவித்துள்ளது. அவை எப்போது நடை முறைப் படுத்தப்படும் என்பதே இப் போதைய கேள்வியாக உள்ளது. குறிப்பாக முதலீடுகள் தொடர்பான அரசின் சீர்திருத்தம் நடை முறைப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது. சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வரும்போது இந்தி யாவின் பொருளாதார நிலை வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், தற்போது உள்ள நிலைமை 1991 ம் ஆண்டில் இந்தியா எதிர்கொண்ட நிலை மையைப் போன்றது அல்ல. 1991-ம் ஆண்டு இந்தியா கடும் பொருளா தார நெருக்கடிக்கு உள்ளானது. ஆனால், தற்போது இந்தியாவின் பணவீக்க விகிதம் குறைவாகவே உள்ளது. அதேபோல் சேமிப்பு அதிகமாக உள்ளது. எனவே தற்போது இந்தியா எதிர் கொண்டிருக்கும் நெருக்கடி விரை வில் மாறும் என்று கூறினார்.

அவரிடம் தனியார் நிறுவனங் கள் முதலீடு குறைந்துவிட்டது குறித்து கேட்கப்பட்ட போது, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தனியார் நிறுவனங்கள் தற்சமயம் முதலீடு செய்ய முடியாத சூழ் நிலையில் இருக்கலாம். அல்லது மக்களவை தேர்தல் முடிவுக்காக காத்திருந்ததும் கூட பெரிய அளவில் முதலீடுகள் மேற் கொள்ளப்படாததற்கு காரணமாக இருக்கலாம் என்று பதிலளித்தார். மேலும் தற்போது இந்தியா எதிர் கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை வேலைவாய்ப்பின்மை என்று அவர் கூறினார்.

கடந்த மாதம், ஐஎம்எஃப் மற்றும் ஆசிய மேம்பாட்டு வங்கி ஆகியவை முன்பு கணித்திருந்த இந்தியாவின் நடப்பு நிதி ஆண்டுக்கான வளர்ச்சி அளவை குறைத்து புதிய கணிப்பை வெளி யிட்டன. இந்நிலையில் கிரிஸில் நிறுவனம், இந்தியாவின் வளர்ச்சி அளவை மேலும் குறைத்துள்ளது. ஐஎம்எஃப் மற்றும் ஆசிய மேம் பாட்டு வங்கி 2019-20 ம் நிதி ஆண் டில் இந்தியாவின் வளர்ச்சி 7 சத வீதமாக இருக்கும் என்று கூறி இருந்த நிலையில், கிரிஸில் நிறு வனம், நடப்பு நிதி ஆண்டில் இந் தியாவின் வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும் என்று கூறியுள்ளது.

SCROLL FOR NEXT