புதுடெல்லி
வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 100 நாட்களில் ரூ.3,000 கோடி மதிப்பில் 200 திட்டங்களை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 8 மாநிலங்கள் வடகிழக்கு மாநிலங்கள் என்றழைக்கப்படு கின்றன. பிரதமர் நரேந்திர மோடி யின் ஆட்சியில் இந்த மாநிலங் களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசில் வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாடு என்ற தனித் துறை செயல்படுகிறது.
இந்த துறையின் அமைச்சர் ஜிதேந்திர பிரசாத் கூறியதாவது:
வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 100 நாட்களில் ரூ.3,000 கோடி மதிப்பில் 200 திட்டங்களை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன்படி சராசரியாக நாளொன் றுக்கு ரூ.30 கோடியில் 2 திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி 30 முறை வடகிழக்கு மாநிலங் களில் சுற்றுப்பயணம் மேற் கொண்டு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் 8 மாநிலங்களிலும் வளர்ச்சித் திட்டங்கள் வேகம் பெற்றுள்ளன.
இந்தியாவின் இதர பகுதி களோடு வடகிழக்கு மாநிலங் களின் நெருக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு மத்திய அரசு செயல் படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.