ஆர்.ஷபிமுன்னா
புதுடெல்லி
உத்திரபிரதேசத்தில் சமாஜ்வாதி (எஸ்பி), பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி) கட்சிகளைச் சேர்ந்த மேலும் சில முக்கிய தலைவர்கள் பாஜகவில் சேர திட்டமிட்டுள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 2 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்களில், முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் நீரஜ் சேகர், பாஜகவில் இணைந்து விட்டார். இவரை அடுத்து ராஜினாமா செய்த சுரேந்திரா நாகரும் விரைவில் பாஜகவில் சேர உள்ளார். இவரைத் தொடர்ந்து சுரேந்திராவின் ஜாட் சமூகத் தலைவர்கள் சிலரும் பாஜகவில் சேர திட்டமிட்டுள்ளனர். இதன்மூலம், ஜாட் சமூகத்தினர் அதிகம் வசிக் கும் உ.பி.யின் மேற்குப் பகுதியில் பாஜக வலுப்பெறும் என எதிர்பார்க் கப்படுகிறது.
இதேபோல, உ.பி.யின் மறொரு முக்கிய கட்சியான மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி) கட்சியைச் சேர்ந்த சில முக்கிய தலைவர்களும் பாஜகவில் சேர உள்ளதாகத் தகவல் வெளி யாகி உள்ளது. இவ்விரு கட்சிக ளின் மாநிலங்களவை உறுப்பினர் கள் மற்றும் உ.பி. சட்டப்பேரவை எம்எல்ஏ-க்கள் சிலரின் பெயரும் பாஜகவுக்கு தாவுவோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இவர்களைத் தொடர்ந்து கட்சி மாறுவோரின் ஆதரவாளர்களும் பெருமளவில் பாஜகவில் சேரும் வாய்ப்புகள் உள்ளன.
இதுகுறித்து உ.பி. பாஜக நிர்வாகிகள் வட்டாரம் ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, “முன்னாள் மாநில, மத்திய அமைச்சர்கள், எம்.பி. மற்றும் எம்எல்ஏ-க்கள் எங்கள் கட்சித் தலைமையுடன் நேரடியாக பேசி வருகிறார்கள். குறிப்பாக, இப்போது தாங்கள் வகிக்கும் பதவியை, கட்சி மாறிய பிறகு இடைத்தேர்தல் மூலம் கண்டிப் பாக தர வேண்டும் என்று அவர் கள் நிபந்தனை விதிப்பதாக கூறப் படுகிறது. இதை ஏற்கவும் பாஜக தயாராக உள்ளதாகக் கூறப்படு கிறது. இதனால், 2022-ல் நடை பெறவுள்ள உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் வெற்றி மிகவும் எளிதாகும்” என்றனர்.
மாநிலங்களவையில் பலம்
நாடாளுமன்ற மாநிலங்களவை யிலும் பாஜக பெரும்பான்மையை நெருங்கி வருகிறது. 245 உறுப்பினர் களைக் கொண்ட மாநிலங்கள வையில் பெரும்பான்மைக்கு 123 உறுப்பினர்கள் அவசியம். ஆனால், பாஜக கூட்டணிக்கு இப்போது 116 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது. காங்கிரஸின் சஞ்சய் சிங் மற்றும் சமாஜ்வாதியின் இருவரது ராஜினாமாவால் மூன்று இடங்கள் காலியாகி உள்ளன. இந்த மூன்று இடங்களும் பாஜகவுக்கே செல்லும் என்பதால், கூட்டணியின் பலம் 119 ஆக உயரும்.
இத்துடன் உ.பி.யில் இருந்து மேலும் சில உறுப்பினர்கள் பாஜகவுக்கு தாவ உள்ளதால், பாஜக கூட்டணிக்கு பெரும் பான்மை கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த கட்சித் தாவல் பின்னணியில் பாஜகவின் வளர்ச்சியும், மக்களவை தேர்தலின்போது அகிலேஷ் மற்றும் மாயாவதி ஆகியோர் மேற்கொண்ட சில தவறான நடவடிக்கைகளும் காரணமாகக் கருதப்படுகிறது. இதில் இருவரும் தேர்ந்தெடுத்த வேட்பாளர்களால் பெரும் அதிருப்தி கிளம்பியது குறிப்பிடத்தக்கது.