இந்தியா

மேகி சர்ச்சை: இந்தியாவுக்கான இயக்குநரை மாற்றியது நெஸ்லே

ராய்ட்டர்ஸ்

சுவிட்சர்லாந்து நிறுவனமான நெஸ்லே, ரசாயன கலப்பு சர்ச்சையை அடுத்து தனது இந்தியாவுக்கான நிர்வாக இயக்குநரை மாற்றியுள்ளது.

மேகி நூடுல்ஸ் நிறுவத்தின் இந்தியாவுக்கான நிர்வாக இயக்குநராக எடீனி பெனெட் பதவி வகித்து வந்தார். இவரைத் தொடர்ந்து அந்த பதவி சுரேஷ் நாராயணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் ஆகஸ்ட் முதல் தேதி பதவி ஏற்கிறார்.

மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமான ரசாயன உப்பு மற்றும் காரீயம் கலந்திருப்பது தெரியவந்ததை அடுத்து பல்வேறு மாநிலங்கள் அதற்கு முதலில் தடை விதித்தன. இறுதியாக, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையமும் பரிசோதனை செய்து மேகி நூடுல்ஸுக்கு நாடு முழுவதும் கடந்த ஜூன் 5-ம் தேதி தடை விதித்தது. இதனால் இந்தியாவில் மிக பிரபலமாக இருந்த நெஸ்லே நிறுவனத்தின் மேகி விற்பனை முடங்கியது.

தடை செய்யப்பட்ட ஒரே மாதத்தில் நூடுல்ஸ் விற்பனை ரூ.350 கோடியிலிருந்து ரூ.30 கோடிக்கு சரிந்துள்ளது. மேகி தடைக்கு முன்னர் ஆண்டுக்கு ரூ.4,200 கோடி விற்பனை இருந்து வந்தது, அதாவது சராசரியாக மாதத்துக்கு ரூ.350 கோடி விற்பனை நடைபெற்று வந்தது.

தற்போது மக்கள் இதனை வாங்க கடும் அச்சம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் விற்பனை கடும் சரிவைச் சந்தித்துள்ளது.

SCROLL FOR NEXT