பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்கள் தங்களது 1.98 லட்சம் ஊழியர்களுக்கு ஜூலை மாதம் சம்பளத்தை வழங்க தவறிவிட்டதாக தொழிற்சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
நிதி நெருக்கடி காரணமாக இரு பொதுத்துறை நிறுவனங்களும் பிப்ரவரி மாதத்திற்கான சம்பளத்தை மார்ச் நடுப்பகுதி வரை தாமதப்படுத்தின. பிஎஸ்என்எல்லின் மொத்த மாத சம்பள செலவுகள் 750 முதல் 850 கோடி வரை இருக்கலாம் என கூறப்படுகிறது, எம்டிஎன்எல் மாத சம்பள செலவுகள் சுமார் ₹ 160 கோடி ஆகும்.
நஷ்டத்தில் இயங்கிவரும் பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனங்களான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) மற்றும் எம்.டி.என்.எல் ஆகிய நிறுவனங்கள் தங்களது 1.98 லட்சம் ஊழியர்களுக்கு ஜூலை மாதம் சம்பளத்தை வழங்க தவறிவிட்டதாக தொழிற்சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பி.எஸ்.என்.எல். கூறும்போது ஆகஸ்ட் 5ம் தேதி நிலுவை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இது குறித்து எம்டிஎன்எல் மனிதவள மற்றும் நிறுவன வர்த்தக இயக்குனர் சுனில் குமார் கூறியதாவது:
நிறுவனம் சில நிலுவைத் தொகையைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது, அதன் பின்னர் மிக விரைவில் சம்பளம் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
-பிடிஐ