நீக்கம் மற்றும் சட்ட திருத்த (4-வது) மசோதா, 2015, நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் மூலம் பயனற்ற, வழக்கொழிந்த, காலாவதியான 295 சட்டங்கள் நீக்கப்படவுள்ளன.
சட்டப்புத்தகங்களை ஆக்ரமிக்கும் பயனற்ற, வழக்கொழிந்த 3,000 சட்டங்களை நீக்கும் முயற்சியில் 295 சட்டங்கள் நீக்கப்படும் மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் பல சட்டங்கள் 30 ஆண்டுகால பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மசோதாக்களில் ஒன்று திருமணச்சட்ட திருத்தங்களைக் கொண்டது, மற்றொன்று சிமெண்ட் பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை விற்பனையைத் தடுக்கும் சட்டமாகும்.
சட்ட அமைச்சகத்தின் ஆட்சிமன்றத் துறையின் தரவுகளின் படி ஏற்கெனவே வழக்கொழிந்த 125 சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற ஒப்புதலுக்காக மேலும் 2 மசோதாக்கள் காத்திருக்கின்றன. இதற்கு ஒப்புதல் கிடைத்தால் மேலும் 945 சட்டங்கள், அதாவது 758 நிதி ஒதுக்கீட்டுச் சட்டங்கள் உட்பட 945 சட்டங்கள் நீக்கப்படும்.
இந்த 945 சட்டங்கள் தவிர, மேலும் 1,871 வழக்கொழிந்த சட்டங்களும் இன்றைய நடைமுறைக்கு ஒத்துவராதது என்று சட்ட அமைச்சகம் கூறியுள்ளது.
திறமையான ஆட்சிக்கு இடைஞ்சலாக இத்தகைய வழக்கொழிந்த சட்டங்கள் இருப்பதாக அதனை நீக்க பிரதமர் மோடி திட்டம் கொண்டு வந்தார்.