ஆர்.ஷபிமுன்னா
புதுடெல்லி
ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங் கத்தின் (ஆர்எஸ்எஸ்) கல்விப்பிரி வின் சார்பில் உத்தரபிரதேசத்தில் புதிதாக ராணுவப் பள்ளி தொடங்கப் பட உள்ளது.
இந்த முதல் ராணுவப்பள்ளி, உத்தரபிரதேசம் புலந்த்ஷெஹரில் ரூ.40 கோடி செலவில் அமைந்து வருகிறது. புலந்த்ஷெஹர் மாவட்டம் அமைந்துள்ள இந்நகரின் ஷிகார்பூர் தாலுக்காவின் கண்டு வாயா கிராமம் ஆர்எஸ்எஸ் தலை வராக இருந்த ராஜு பைய்யா எனும் ராஜேந்தர்சிங்கின் பிறந்த இடம் ஆகும்.
இதனால், அவரது நினைவாக அங்கு ஆர்எஸ்எஸ் அமைக்கும் பள்ளிக்கு ‘ராஜு பைய்யா சைனிக் வித்யா மந்திர்’ எனப் பெயரிடப் பட்டுள்ளது. இதன் கட்டிடப்பணிகள் பல்வேறு இடங்களில் இருந்து நன்கொடை பெற்றும் நடைபெற்று வருகின்றனர். இங்கு பயிலும் மாண வர்களிடம் குறைந்த கட்டணம் பெற்று ராணுவப்பள்ளி நிர்வகிக்கப் படும்.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் ஆர்எஸ்எஸ் அமைப் பின் மேற்கு உ.பி. பகுதி மற்றும் உத்தராகண்டின் பிராந்திய அமைப் பாளரான அஜய் கோயல் கூறும் போது, ‘கடந்த 40 வருடங்களாக நமது நாட்டின் ராணுவத்தில் சுமார் 10,000 அதிகாரிகள் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இதை பூர்த்தி செய்யும் வகையில், எங்கள் ராணுவப்பள்ளியின் மாணவர் கள் கல்வியுடன் தேகப்பயிற்சி யும் அளித்து தயார் செய்யப் படுவார்கள். இதில் படிப்பவர்கள் அனைவரும் ராணுவத்தில் சேர்க்கப்படுவது முக்கிய நோக்கம் எனினும், அது கட்டாயம் அல்ல’ எனத் தெரிவித்தார்.
நாடு முழுவதிலும் உள்ள மத்திய அரசின் சைனிக் ஸ்கூல் ராணுவப் பள்ளிகளை போலவே நடத்தப்படும் முதல் தனி யார் பள்ளி இதுவாகும். இதுவும், தங்கும் விடுதி வசதியுடன் 1,120 மாணவர்களுக்கானதாக அமைய உள்ளது. இது, மத்தியில் தலைமை ஏற்று ஆளும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பின் வித்யா பாரதி எனும் கல்விப்பிரிவுகளுள் ஒன்றாக இருக்கும்.
வித்யா பாரதி சார்பில் நாடு முழுவதிலும் சுமார் 13,000 பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இதுதவிர ‘ஏக்கல் வித்யாலயா’ எனும் பெயரிலான ஒரு ஆசிரியர் கொண்ட துவக்கப் பள்ளிகள் சுமார் 9,500 இயங்குகின்றன. இந்தப் பட்டியலில் உ.பி.யின் புலந்த்ஷெஹரில் முதல் ராணுவப்பள்ளி ஏப்ரல் 1, 2020 முதல் இயங்க உள்ளது. இதன் முதலா மாண்டில் ஐந்தாம் வகுப்பில் 160 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். தொடர்ந்து அதன் வகுப்புகள் ப்ளஸ் 2 வரை யில் நீட்டிக்கப்படும். இப்பள்ளியை முன்னுதாரணமாக கொண்டு நாட்டின் மற்றப் பகுதிகளிலும் ஆர்எஸ்எஸ் மேலும் பல ராணுவப் பள்ளிகளை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.