இந்தியா

டெல்லி வீட்டை காலி செய்ய நோட்டீஸ்; அமலாக்கத் துறைக்கு எதிராக கார்த்தி சிதம்பரம் மனு

செய்திப்பிரிவு

புதுடெல்லி

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் டெல்லி வீட்டை காலி செய்ய அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்கு எதிராக பிஎம்எல்ஏ தீர்ப் பாயத்தில் கார்த்தி முறையிட் டுள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி, ஜோர் பாக் பகுதியில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீட்டை முடக்கி அமலாக்கத் துறை கடந்த ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி உத் தரவிட்டது. இதனை சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்ட (பிஎம் எல்ஏ) தீர்ப்பாயம் கடந்த மார்ச் 29-ம் தேதி உறுதி செய்தது. இதை யடுத்து முடக்கப்பட்ட வீட்டை 10 நாட்களுக்குள் காலி செய்து ஒப்படைக்குமாறு கார்த்திக்கு அம லாக்கத் துறை நேற்று முன்தினம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் இதற்கு எதிராக பிஎம்எல்ஏ தீர்ப்பாயத்தில் கார்த்தி நேற்று மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், “வீடு முடக்கப் பட்டதற்கு எதிராக பிஎம்எல்ஏ மேல் முறையீட்டு ஆணையத்தில் முறை யிட்டுள்ளேன். ஆணையத்தில் எனது மனு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் வீட்டை காலி செய்யுமாறு அமலாக்கத் துறை பிறப்பித்த உத்தரவு சட்டத்துக்கு புறம்பானது” என்று கூறியுள்ளார்.

இந்த வீடு கார்த்தி மற்றும் அவரது தாயார் நளினி சிதம்பரம் பெயரில் இருப்பதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஏர்செல் மேக் சிஸ் வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கில் வாதிட்டு வரும் சொலிசிட்டர் ஜென ரல் துஷார் மேத்தா நீதிமன்றத்துக்கு வரமுடியாததால் வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை வரும் 9-ம் தேதிக்கு தள்ளி வைத்தார். மேலும் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையையும் 9-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

ப.சிதம்பரம் மத்திய நிதியமைச் சராக இருந்தபோது அந்நிய முதலீடுகளுக்கு அனுமதி வழங்கிய தில் முறைகேடு நடந்ததாகவும் இதில் கார்த்தி சிதம்பரம் பலன் அடைந்ததாகவும் எழுந்த புகா ரின் அடிப்படையில் இவ்விரு வழக்குகளை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரித்து வருகின்றன

SCROLL FOR NEXT