இந்தியா

யாகூப் மேமன் விவகாரம்: நீதித் துறையை மதிக்காதவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லலாம் - பாஜக எம்.பி. சாக்சி மகராஜ் கருத்து

செய்திப்பிரிவு

இந்திய நீதித் துறையை மதிக்காதவர்கள் பாகிஸ்தான் செல்லலாம் என்று பாஜக எம்.பி. சாக்சி மகராஜ் தெரிவித்துள்ளார்.

மும்பை தொடர் குண்டுவெடிப் பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள யாகூப் மேமனை தூக்கிலிடக்கூடாது என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, பேஸ்புக்கில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து உத்தரப் பிரதேச பாஜக எம்.பி. சாக்சி மகராஜ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், இந்திய நீதித் துறை, சட்டத்தை மதிக்காதவர்கள் பாகிஸ்தான் செல்லலாம், அவருக்கு கதவு திறந்தே இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே நாடாளுமன்ற முடக்கம் குறித்து அவர் கூறியிருப்பதாவது: லலித் மோடி விவகாரத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். அமைச்சர் சுஷ்மாவுடன் அவர் நேரடி விவாதத்துக்கு தயாரா?

சோனியா காந்தியும் அவரது மகன் ராகுல் காந்தியும் இத்தாலிக்கு செல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT