மும்பை
கேரள மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் கொடி யேறி பாலகிருஷ்ணன். இவரு டைய மகன் பினோய் பால கிருஷ்ணனுக்கு கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் ஆனது.
இந்நிலையில், பார் ஒன்றில் நடனமாடி வந்த பிஹார் பெண்ணு டன் (33) பினோய்க்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்தப் பெண் மும்பை போலீஸில் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்தார். அதில், ‘‘பார் ஒன்றில் பணி புரியும் போது கடந்த 2009-ம் ஆண்டில் பினோய் பாலகிருஷ்ணனுடன் பழக்கம் ஏற்பட்டது. அதன்பின் திருமணம் செய்து கொள்வதாக கூறி, பல முறை அவர் பலாத்காரம் செய்தார். மேலும், செலவுக்கு என் வங்கிக் கணக்கில் பல ஆண்டுகளாக அவர் பணம் அனுப்பி வந்தார். அவருடன் வாழ்ந்ததில் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு தற்போது 9 வயதாகிறது. அவனுக்கு பினோய்தான் தந்தை. எனவே, பினோய் கிருஷ்ணனுக்கு மரபணு சோதனை (டிஎன்ஏ) நடத்த வேண்டும்’’ என்று கோரியிருந்தார். இந்த வழக்கு மும்பை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், தன் மீது அந்தப் பெண் பொய் புகார் கூறுவ தாகவும், புகாரை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியும் மும்பை உயர் நீதிமன்றத்தில் பினோய் மனு தாக்கல் செய்தார். மேலும், டிஎன்ஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஆனால், டிஎன்ஏ சோதனைக்காக ரத்த மாதி ரியை அளிக்கும்படி பினோய்க்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி கடந்த செவ்வாய்க் கிழமை தனது ரத்த மாதிரியை போலீஸிடம் அளித்தார் பினோய். ரத்த மாதிரியின் சோதனை அறிக் கையை மூடி முத்திரையிட்ட (சீல் வைத்த) உறையில் வைத்து உயர் நீதிமன்றத்தில் உடனடி யாக மும்பை போலீஸார் சமர்ப்பித் துள்ளனர். இந்த வழக்கு ஆகஸ்ட் 26-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.