இந்தியா

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க முடிவு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதா வது:

உச்ச நீதிமன்ற தலைமை நீதி பதியை தவிர தற்போது அங்குள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 31 ஆக உள்ளது. இதை 33 ஆக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நாடாளுமன்றம் இதற்கு ஒப்புதல் வழங்கியதும் நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும். உச்ச நீதிமன் றத் தலைமை நீதிபதியின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீட்டை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமல்படுத்தவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கி யுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்வகைப்படுத்து தலுக்காக அமைக்கப்பட்ட ஆணையத்தின் பதவிக்காலத்தை அடுத்த 6 மாத காலத்துக்கு நீட்டிக்கவும் அமைச்சரவை ஒப்பு தல் வழங்கியுள்ளது. அதாவது 2020-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி வரை இந்த ஆணையம் செயல்படும். இவ்வாறு அவர் கூறினார். - பிடிஐ

SCROLL FOR NEXT