இந்தியா

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் சரித்திரம் படைத்த சாதனையாளர்கள்

செய்திப்பிரிவு

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் டெல்லி யைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி யான ஐரா சிங்கால் தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

கடந்த 2010-ம் ஆண்டிலேயே அவர் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டார். ஆனால் மாற்றுத் திறனாளி என்பதால் அவருக்கு உரிய பணியிடம் ஒதுக்கப்பட வில்லை. இதை எதிர்த்து நீதிமன்றத் தில் போராடிய அவர், 2014-ம் ஆண்டில் இந்திய வருவாய் துறை யில் பணியில் சேர்ந்தார்.

கடந்த 2010-ல் புறக்கணிக்கப் பட்ட அவர் தனது ரேங்கை உயர்த்த அடுத்தடுத்து இரண்டு முறை தேர்வு எழுதினார். தற்போது 4-வது முறையாக யுபிஎஸ்சி தேர்வு எழுதி தேசிய அளவில் முதலிடத்தை எட்டிப் பிடித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியபோது, ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பது எனது சிறுவயது லட்சியம். அதன்மூலம் மாற்றுத் திறனாளி களின் நலனுக்காக பாடுபட வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தமுறை எனக்கு தகுந்த பணி யிடம் ஒதுக்கப்பட வேண்டும் என்றார்.

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், செங்கனசேரியைச் சேர்ந்தவர் ரேணு ராஜ். யுபிஎஸ்சி தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்ற அவர் தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித் துள்ளார்.

கோட்டயம் மருத்துவக் கல்லூரி யில் 2013-ம் ஆண்டில் அவர் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றார். மருத்துவ முதுநிலைப் படிப்புக்கு அவருக்கு இடம் கிடைத்தது. ஆனால் சிறுவயது முதலே ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற ஆசையால் அதை தவிர்த்தார்.

கொல்லம் அருகே கல்லுவாத் துக்கால் கிராமத்தில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டே ஐ.ஏ.எஸ். தேர்வுக்குப் படித்தார். மொழிப்பற்று காரணமாக மலை யாளத்தை விருப்பப் பாடமாக தேர்வு செய்தார். இதனிடையே பெற்றோரின் விருப்பப்படி அவருக்கு திருமணம் நடை பெற்றது. அவரது கணவர் பாகத் மங்களூரில் மருத்துவ முதுநிலைப் படிப்பு பயின்று வருகிறார். கணவரின் குடும்பத்தினரும் ரேணு ராஜுக்கு பக்கபலமாக இருந்தனர்.

இதன் பலனாக யுபிஎஸ்சி தேர்வில் முதல்முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறியபோது, பிறந்த வீடு புகுந்த வீடு இரண்டையுமே ரேணு பெரு மைப்படுத்தியுள்ளார் என்றனர்.

வலது கையை இழந்தாலும்..

பஞ்சாப் மாநிலம், லூதி யாணாவை சேர்ந்தவர் சகில் குமார் (25). கடந்த 2012-ம் ஆண்டில் விபத்தில் இவரது வலது கை நசுங்கியது. பல்வேறு அறுவைச் சிகிச்சைகளுக்குப் பிறகும் அவரது கை குணமாகவில்லை. வலது கை பழக்கம் கொண்ட அவருக்கு அப்போது வாழ்க்கையே சூன்யமானதாக தோன்றியது.

விபத்து நேரிட்டபோது அவர் டெல்லி எய்ம்ஸில் எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு படித்து வந்தார். தேர்வு நெருங்கி வந்த வேளையில் அவர் முதல் வகுப்பு மாணவன் போன்று இடது கையால் ஏ, பி, சி எழுதப் பழகினார். அதன்பின் படிப் படியாக இடது கை பழக்கத்துக்கு மாறினார்.

அதன்பின்னர் யுபிஎஸ்சி தேர்வு எழுதி தற்போது 447-வது இடத்தைப் பிடித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள் பிரிவில் இந்திய வெளியுறவுத் துறையில் அவர் பணியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT