இந்தியா

திருமண இணையதளம் மூலம் ஹைதராபாத் பெண் டாக்டரிடம் ரூ.49 லட்சம் மோசடி: நைஜீரிய நாட்டினர் உட்பட 4 பேர் டெல்லியில் கைது

என்.மகேஷ் குமார்

திருமண இணைய தளம் மூலம் ஹைதராபாத்தை சேர்ந்த பெண் மருத்துவரிடம் ரூ. 48.75 லட்சம் மோசடி செய்த 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இங்கிலாந்தில் வாழும் இந்திய மருத்துவர் அபிஷேக் மோகன் என்ற பெயரில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் திருமண இணைய தளத்தில் ஒரு விளம்பரம் வந்தது. அதைப்பார்த்த ஹைதராபாத்தை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் அபிஷேக் மோகனுடன் இணையதளத்தில் தொடர்பு கொண்டார். அவர்களது நட்பு காதலாக மாறியது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்வது என தீர்மானித்தனர்.

இதனிடையே, இந்தியாவில் உள்ள தங்களது உறவினர்களை நம்ப முடியவில்லை. எனவே, தன்னிடம் உள்ள தங்க பிஸ்கெட்டு கள், தங்க நகைகள், பரிசு பொருட் கள் மற்றும் மருத்துவ தொழிலுக்கு தேவையான சில உபகரணங்களை அனுப்பி வைப்பதாக பெண் மருத்துவரிடம் அபிஷேக் மோகன் கூறினார். மேலும், தான் அடுத்த மாதம் இந்தியா வரும்போது வரி செலுத் திய பணத்தை கொடுத்து அப் பொருட்களைப் பெற்றுக் கொள்வ தாகவும் தெரிவித்தார். அதனை நம்பி அவர் தனது ஹைதராபாத் முகவரியை கொடுத்தார்.

இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 7-ம் தேதி பெண் மருத்துவருக்கு ஒரு பார்சல் வந்துள்ளது. அதனை தொடர்ந்து சுங்க வரி அதிகாரி ஒருவர் பெண் மருத்துவரை தொடர்பு கொண்டு தொலைபேசியில் பேசினார். அப் போது, சில கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த பொருட்கள் இங்கிலாந் தில் இருந்து வந்திருப்பதாகவும், அதனை வரி செலுத்தி பெற்றுக் கொள்ளுமாறும் கூறி உள்ளார்.

இதனை நம்பிய பெண் மருத்துவர், ரூ. 20 லட்சத்தை சுங்க அதிகாரி தெரிவித்த வங்கிக் கணக்கில் ஆன்-லைன் மூலம் செலுத்தினார். பின்னர் மீண்டும் தொடர்பு கொண்ட அந்த சுங்க அதிகாரி, வந்த பார்சலை முழுமையாக பெற, மேலும் ரூ. 28.75 லட்சம் வரி செலுத்த வேண் டும் எனக் கூறினார். இதனால், வங்கிக் கடன் பெற்று மேலும் ரூ. 28.75 லட்சத்தை பெண் மருத்துவர் செலுத்தி உள்ளார். இதுகுறித்து இங்கிலாந்தில் உள்ள அபிஷேக் மோகனிடமும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மேலும் ரூ. 75 லட்சம் செலுத்த வேண்டுமென அந்த சுங்க அதிகாரி கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த பெண் மருத்துவர், அபிஷேக் மோகனை தொடர்பு கொண்டார். ஆனால், அவரது போன் `சுவிட்ச் ஆஃப்’ செய்யப்பட்டு விட்டது. இதனால் சுங்க அதிகாரியை தொடர்பு கொண்டார். அவரது போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந் தது. இதன்பிறகே, தான் ஏமாற்றப் பட்டதை உணர்ந்த பெண் மருத்து வர் ஹைதராபாத் சைபர் கிரைம் பிரிவு காவல்துறையில் புகார் செய்தார்.

வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்ட காவல் துறையினர், மோசடிக் கும்பல் டெல்லியில் வசிப்பதைக் கண்டு பிடித்தனர். அந்தக் கும்பல் திருமண வலைதளங்களில் விளம் பரம் கொடுக்கும் பணக்கார பெண் கள், வெளிநாட்டு வாழ் இந்தியர் களை குறிவைத்து ஏமாற்றுவது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து டெல்லியை அடுத்த குர்கான் பகுதியில் வசித்து வந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த ஜோசப் இரபோர் பஹஹென் (26), பாவோ ஹில்லாரி ஒமாக்பெமி (35), சுங்க அதிகாரி போன்று ஆண் குரலில் பேசிய ஹென்றி சிமா ஹனிடபே (30), நாகாலாந்தை சேர்ந்த லெனியா மாக் (26) ஆகிய 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்த கும்பல் பணக்கார பெண்களை குறி வைத்து அவர் களுக்கு ஏற்றாற் போல், தங்களது விண்ணப்பத்தை திருமண இணைய தளத்தில் உருவாக்கி ஏமாற்றி வந்தது தெரிய வந் துள்ளது. வெளிநாட்டு சிம் கார்டு கள் மூலம் பெண்களிடம் பேசி தாங்கள் வெளிநாட்டில் இருப்பது போன்று ஏமாற்றி உள்ளனர்.

SCROLL FOR NEXT