இந்தியா

தலித் எம்எல்ஏ போராட்டம் செய்த இடத்தை சாணத்தால் சுத்தம் செய்த காங். கட்சியினர்

செய்திப்பிரிவு

திருச்சூர்:

கேரளாவின் திருச்சூர் மாவட்டம், நட்டிகா தொகுதி எம்எல்ஏ கீதா கோபி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர். இவர் கடந்த சனிக்கிழமை தனது தொகுதியில் சாலைகள் மோசமாக இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுப்பணித் துறை அலுவலம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் உறுதி கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டார்.

கீதா அங்கிருந்து சென்ற பிறகு அவர் அமர்ந்து போராட்டம் நடத்திய இடத்தை இளைஞர் காங்கிஸார் சாணம் கலந்த தண்ணீரை தெளித்து சுத்தம் செய்துள்ளனர். கீதா, சாதி அடிப்படையில் தான் அவமதிக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.காங்கிரஸாரின் இந்த செயலுக்கு கேரள அமைச்சர் கே.கே.ஷைலஜா கண்டனம் தெரிவித்துள்ளார். 

இளைஞர் காங்கிரஸ் தலைவர் தீன் குரியகோஸ் கூறும்போது, “எல்எல்ஏ கீதா கோபிக்கு எதிராக இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் போராட்டம் நடத்தியுள்ளனர். அவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து விளக்கம் கேட்குமாறு உத்தவிரட்டுள்ளேன். சாதி அடிப்படையில் எம்எல்ஏ அவமதிக்கப்பட்டது தெரியவந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.கீதா கோபி

SCROLL FOR NEXT