இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் சாலை விபத்து: 17 பேர் பலி

செய்திப்பிரிவு

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பேருந்து ஒன்று 400 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 17 பேர் பலியாகினர், 34 பேர் படுகாயமடைந்தனர்.

ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ரம்பன் மாவட்டத்தில் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சம்பவம் குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்: "ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து இன்று அதிகாலை ரம்பன் மாவட்டம் டிட்கோல் அருகே வந்த போது ஓட்டுநர் கட்டுப்பாட்டில் இருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே 17 பயணிகள் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு ஹெலிகாப்டர்கள் விரைந்துள்ளன. மீட்புப் பணிகளில் மாவட்ட நிர்வாகத்தினருடன் ராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.

பேருந்தில் இருந்தவர்களில் சிலர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பெரும்பாலானோர் காஷ்மீர் மாநிலம் பூஞ்ச், ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது". இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT