ரம்ஜான் பண்டிகை மற்றும் ஜெகந் நாதர் ரத யாத்திரையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
இதுதொடர்பாக மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “நாட்டு மக்களுக்கு ரம்ஜான் நல்வாழ்த்து கள். நாட்டில் ஒருமைப்பாடு மற்றும் அமைதி ஆகியவற்றை வலுப் படுத்த இந்தத் திருநாள் உதவட்டும். அத்துடன் அனைவரது வாழ்விலும் வளமும் ஆரோக்கியமும் பெரு கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நேற்று தொடங்கிய ஜெகந்நாதரின் 138-வது ரத யாத்திரை விழாவை முன்னிட்டும் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “ஜெகந்நாதர் ரத யாத்திரை விழாவை முன்னிட்டு அனைவருக்கும் எனது உளம் கனிந்த நல்வாழ்த்துகள். நாடு முழுவதும் மிகவும் உற்சாகமுடன் கொண்டாடப்படும் இந்த பாரம் பரிய விழா இப்போது உலக அளவில் பிரபலமாகி உள்ளது. மக்களுக்கு ஆசீர்வதிப்பதற்காக தேரில் பவனி வரும் ஜெகந்நாதரை நாம் வழிபடுவோம். சமுதாயத்தில் சந்தோஷமும் ஒருமைப்பாடும் நிலவ ஜெகந்நாதர் ஆசீர்வதிக்கட் டும். அவருடைய கருணையால் ஏழை மற்றும் விவசாயிகள் வாழ்வில் வளம் பெருகட்டும்” என கூறியுள்ளார்.
குஜராத் முதல்வராக இருந்த போது ஜெகந்நாதர் ரத யாத்திரை யின்போது தாம் செய்த சடங்கு களை நினைவுகூர்ந்துள்ள மோடி, அது தொடர்பான 4 புகைப் படங்களை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார்.