இந்தியா

அம்புகளுக்கு ஆயுள், அம்பை ஏவியவருக்கு தூக்கு: உச்ச நீதிமன்றம் கருத்து

செய்திப்பிரிவு

மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக 129 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் யாகூப் மேமன் உட்பட 12 பேருக்கு மும்பை தடா நீதிமன்றம் கடந்த 2007-ம் ஆண்டில் மரணதண்டனை விதித்தது. வழக்கு விசாரணையின்போதே ஒருவர் உயிரிழந்துவிட்டார்.

எனினும் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் 10 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுளாகக் குறைக்கப்பட்டது. யாகூப் மேமனுக்கு மட்டும் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

இதுகுறித்து உச்ச நீதிமன்றம் அப்போது கூறியதாவது:

பத்து பேரின் மரண தண்டனை ஆயுளாகக் குறைக்கப் பட்டிருக்கிறது. அந்த 10 பேரும் சமுதாயத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் வாழ்ந்த வர்கள். அவர்களுக்கு நிரந்தர வேலை இல்லை. இதனால் வறுமையில் வாடிய அவர்கள் சிலரின் சதிவலையில் சிக்கி யுள்ளனர்.

இதை ஏற்க முடியாது என்றாலும் அவர்கள் வெறும் அம்புகள்தான். அவர்களை வில்லில் இருந்து ஏவியவர் களை மன்னிக்க முடியாது. அவர்கள்தான் திட்டமிட்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.

அந்தந்த வழக்கின் பின்னணி, உண்மைகளை ஆதாரமாகக் கொண்டே தீர்ப்பளிக்க வேண்டும்.

இவ்வாறு உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

SCROLL FOR NEXT