கோப்புப்படம் 
இந்தியா

காஷ்மீர் மாநிலத்தில் 4 தொழிலதிபர்களின் வீடுகளில் சோதனை

செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்

கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் பாகிஸ் தான் தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்குப் பிறகு தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்வோரை என்ஐஏ அதிகாரி கள் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்ததாக சந்தேகிக்கப்படும் 4 தொழில திபர்களின் வீடுகள், அலுவல கங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். காஷ் மீரின் பாரமுல்லா மாவட்டம், கான்லிபாக் பகுதியில் இந்த சோதனைகள் நடைபெற்றன. இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 4 தொழில திபர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.

SCROLL FOR NEXT