புதுடெல்லி
பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த வேண்டும் என அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் அலிகர் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பல்வேறு மசூதிகளில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற் றது. அப்போது, சில மசூதிகளுக்கு முன்பு உள்ள சாலைகளை ஆக்கிரமித்து முஸ்லிம்கள் தொழுகை நடத்தியதாக கூறப் படுகிறது.
இதற்கு அங்குள்ள இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரி வித்தன. மேலும், செவ்வாய்க் கிழமை தோறும் ஆஞ்சநேயர் கோயிலுக்கு முன்புள்ள சாலை களில் திருவிழாக்கள் நடத்தப்படும் எனவும் அவை அறிவித்தன. இதனால், அலிகரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் அறிக்கை ஒன்று வெளி யிடப்பட்டுள்ளது. அதில், பொது மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த வேண்டும் என்றும், சாலை களில் தொழுகையில் ஈடுபட வேண்டாம் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதனிடையே, சாலைகளில் மதம் சம்பந்தமான விழாக்களை நடத்த அலிகர் மாவட்ட ஆட்சியர் நேற்று தடை விதித்துள்ளார். எனினும், ஆஞ்சநேயர் திருவிழா செவ்வாய்க்கிழமை சாலைகளில் விமரிசையாக நடைபெறும் என இந்து அமைப்புகள் தெரிவித் துள்ளன.
- பிடிஐ