இந்தியா

ஜெய்பால் ரெட்டி உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி: சந்திர சேகர ராவ் அறிவிப்பு

செய்திப்பிரிவு

ஹைதராபாத்

ஹைதராபாத்தில் காலமான காங்கி்ரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்பால் ரெட்டிக்கு திங்களன்று அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் தெரிவித்துள்ளார். 

77 வயதான ஜெய்பால் ரெட்டி நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கச்சிபவுலி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்து வந்தநிலையில், சிகிக்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 1.30 மணிஅளவில்ஜெய்பால் ரெட்டி காலமானார். 

மறைந்த தலைவருக்கு முழு அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்த தேவையான ஏற்பாடுகளை மாநில முதன்மைச் செயலருக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளதாக இன்று வெளியான அரசுக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெய்பால் ரெட்டி மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், காங்கிரஸ் கட்சி, தெலங்கானா அமைச்சர்கள், தலைவர்கள், ஜெய்பால் ரெட்டியின் மறைவுக்கு அவருடன் அரசியல் வாழ்க்கையில் தொடர்புடைய பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

முன்னதாக தெலங்கானா முதல்வர் இன்று, சந்திர சேகர ராவ் ஜெய்பால் ரெட்டியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின் மறைந்த தலைவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

- பிடிஐ

SCROLL FOR NEXT