புதுடெல்லி,
துப்பாக்கி தோட்டாக்கள், வெடிகுண்டுகளைக் காட்டிலும் வளர்ச்சி, மேம்பாடு வலிமையானது, வெறுப்பைப் பரப்பி காஷ்மீரில் வளர்ச்சித் திட்டங்களுக்கு தடை செய்யம் நினைப்பவர்கள் எண்ணம் வெற்றி பெறாது என்று பிரதமர் மோடி மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பேசினார்.
கடந்த முறை ஆட்சியில் இருந்த போது ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழையும் "மன் கி பாத்" வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார்.
மக்களைவைத் தேர்தல் வெற்றிக்குப்பின் பிரதமர் மோடி 2-வது முறையாக மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று பங்கேற்று மக்களுக்கு வானொலி மூலம் உரையாற்றினார். பிரதமர் மோடி இன்றைய நிகழ்ச்சியில் காஷ்மீரில் வளர்ச்சி, சந்திரயான்-2 செயற்கைக்கோள்,சுதந்திர தினம், அமர்நாத் யாத்திரை உள்ளிட்ட விஷயங்கள் குறித்துப் பேசினார். அதன் விவரம் வருமாறு:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத நடவடிக்கைகள் குறைந்து, கடந்த ஜுன் மாதத்தில் இருந்து எல்லையோரத்தில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த கிராமத்துக்கு ஆர்வத்துடன் திரும்பி வருகிறார்கள். அவர்களுக்கு துணையாக இருக்கும் அதிகாரிகள் அவர்களுடன் ஆலோசித்து தேவையான வளர்ச்சித் திட்டங்களை செய்து வருகிறார்கள்.
மக்களின் ஆர்வத்தைப் பார்க்கும்போது, வளர்ச்சிப் பாதைக்கு வருவதற்கு ஆசையுடன் இருப்பதை காட்டுகிறது, மக்கள் நல்ல சிறந்த நிர்வாகத்தை எதிர்பார்க்கிறார்கள், அதில் பங்குபெறவும் விரும்புகிறார்கள். இதன்மூலம், துப்பாக்கி தோட்டாக்கள், வெடிகுண்டுகளைக் காட்டிலும் வளர்ச்சியும், மேம்பாடும் வலிமையானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சிப் பாதைகளை வெறுப்பு எனும் தடைகளை உருவாக்க நினைப்பவர்கள், பரப்புப விரும்புபவர்கள் ஒருபோதும் வெற்றி பெற இயலாது என்பது தெளிவாகத் தெரிகிறது.முதல்முறையாக 4500 பஞ்சாயத்துகளில், எதிரிகளின் துப்பாக்கி குண்டுகள் பாயும் இடங்களில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்கே சென்று மூத்த அதிகாரிகள் மக்களுடன் பேசி தேவையை அறிந்து வருகின்றனர்.சோபியான், புல்வாமா, குல்கம், ஆனந்த்நாக் மாவட்டங்களில் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகம் இருந்த நிலையில், இப்போது மக்கள் அச்சமில்லாமல் வசிக்கிறார்கள்.
ஜூலை 1-ம் தேதியில் இருந்து அமர்நாத் புனிய யாத்திரையில் இதுவரை 3 லட்சம் பக்தர்கள் பங்கேற்று சென்றுள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டில் 60 நாட்களில் இருந்த எண்ணிக்கையை இந்த முறை முறியடித்துள்ளது. அந்த மாநில மக்களின் நல்கவனிப்பும், உபசரிப்பும் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் சர்தாம் யாத்திரையிலும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் சென்று வருகின்றனர். கேதார்நாத் புனித மலைக்கு 8 லட்சம் பக்தர்கள் சென்றுவந்தனர்.
ஆகஸ்ட் 15-ம் தேதி வரும் நமது தேசத்தின் சுதந்திரதினத்தை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும். எந்தெந்த வழிகளில் சிறப்பாகக் கொண்டாடலாம் என்பதை மக்கள் கண்டறிந்து அனைவரும் கொண்டாட்டத்தில் பங்கேற்க வேண்டும். ஆகஸ்ட் 15-ம் தேதி நம்முடைய சுதந்திர தினம் கிராமங்களில் கொண்டாடப்படும் விழாபோன்றும், மக்களின் விழாவாகவும் இருத்தல் வேண்டும்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மாநில அரசுகளுடன் சேர்ந்து மத்திய அரசு மின்னல் வேகத்தில் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளது.
தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில் மேகாலாய அரசு தண்ணீர் குறித்த கொள்கையை உருவாக்கியது பாராட்டுக்குரியது. குறைந்த நீரில் விளையும் பயிர்களைக் கண்டறிந்து விவசாயிகளை பயிரிட ஊக்கமளித்துவரும் வரும் ஹரியானா அரசுக்கும் பாராட்டுக்கள்.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய நமது விஞ்ஞானிகள் வெற்றிகரமாக சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்தியுள்ளனர். தொடக்கத்தில் சில எதிர்பாராத தடங்கல்கள் வந்தபோதிலும் அதை தகர்த்து வெற்றிவெற்றி பெற்றனர். சிலநேரங்களில் நமது வாழ்கில் தற்காலிக தடைகள் ஏற்படலாம், அதை நமது திறமையால் அதிலிருந்து மீண்டு வரவேண்டும்.
சந்திரயான-2 விண்கலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. செப்டம்பர் மாதம் நிலவில் லாண்டர் விக்ரம் தரையிறங்குவதையும், ரோவர் பிரக்யான் ஆய்வு செய்வதையும் ஆவலுடன் பார்த்திருக்கிறோம். இதன் மூலம் நிலவைப் பற்றி ஆழமாக நாம் அறிய முடியும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்
பிடிஐ