ராணுவ வீரர்கள் எங்களுக்காக செய்த தியாகங்களை நாங்கள் என்றும் மறக்கமாட்டோம் என்று, கார்கில் போரின் 20 -ம் ஆண்டு தினத்தைதையொட்டி கோலி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரின் 20-ம் ஆண்டு வெற்றி தினம் இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் ராணுவர் வீர்ரகளின் தியாகத்தை போற்றும் வகையில் சமூக வலைதளங்களில் தங்கள் பதிவை பதிவிட்டுள்ளனர்.
மேலும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடிகர்களும் கார்கில் போரின் 20-ம் ஆண்டு நினைவு தினத்திற்கு ராணுவ வீரர்களுக்கு தங்கள் வாழ்த்தை தெரிவித்துவித்து வருகின்றனர்.
அந்த வகையில், இந்திய கிரிக்கெட் வீரர் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில், “ நீங்கள் எங்களுக்காக செய்த தியாகங்களை நாங்கள் என்றும் மறக்கமாட்டோம். உங்கள் மீது எப்போதும் அன்பும் மதிப்பும் வைத்துள்ளோம். தலைவணங்குகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
We will never forget all the sacrifices you made for us. Respect, Love, Salute.