இந்தியா

பாஜக எம்.பி.ரமாதேவி குறித்து ஆட்சேப கருத்து தெரிவித்த எம்.பி. ஆசம்கான்: மக்களவையில் கடும் அமளி

செய்திப்பிரிவு

புதுடெல்லி

மக்களவையில் நேற்று மக்கள வைத் தலைவர் ஓம் பிர்லா இல்லாத காரணத்தால் அவையை பாஜக எம்.பி. ரமாதேவி நடத்தினார். அப்போது முத்தலாக் மசோதா தொடர்பான விவாதம் நடைபெற்று வந்தது.

மசோதா குறித்து சமாஜ்வாதி எம்.பி. ஆசம்கான் பேசும்போது, மற்ற உறுப்பினர்கள் அவருக்கு இடையூறு செய்தனர். அப்போது பேசிய ரமாதேவி, “மற்ற உறுப்பினர் களுக்கு நீங்கள் (ஆசம்கான்) பதிலளிக்கவேண்டாம். நீங்கள் உங்கள் கருத்தை அவைக்குத் தெரிவியுங்கள்” என்றார்.

அப்போது ரமாதேவி குறித்து ஒரு ஆட்சேபகரமான கருத்தை ஆசம்கான் தெரிவித்தார். இதனால் கோபமடைந்த பாஜக உறுப்பினர் கள் ஆசம்கான் மன்னிப்புக் கோர வேண்டும் என கோஷமிட்ட னர். மேலும் அவர் பேசிய கருத்தை அவைக் குறிப்பிலிருந்து நீக்கு மாறும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் கோஷம் எழுப்பியதால் மக்களவை யில் கடும் அமளி ஏற்பட்டது.

அப்போது பேசிய ஆசம்கான், “நீங்கள்(ரமாதேவி) மிகவும் மதிப்பு மிக்கவர். நீங்கள் என் சகோதரி போன்றவர்” என்று ரமாதேவியை நோக்கிப் பேசினார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் ஆசம்கான் ஒழுங்கீனமான வகையில் பேசி வருகிறார். அவையின் நடத்தை விதிகளை அவர் மீறிவிட்டார். அவர் உடனடியாக மன்னிப்புக் கேட்கவேண்டும்” என்றார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “ஆசம்கான், ரமாதேவி குறித்து எந்தவித மரியா தைக் குறைவான வார்த்தையையும் பேசவில்லை” என்றார்.

பின்னர் அவைக்கு வந்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, அவையை நடத்தினார். அப்போது ஆசம்கான் பேசும்போது, “நான் எந்த மரியாதைக் குறைவான வார்த்தையையும் பேசவில்லை. நான் தகாத வகையில் பேசியதாக நிரூபித்தால் நான் உடனடியாக ராஜினாமா செய்கிறேன்” என்றார்.

அப்போது ஓம் பிர்லா பேசும் போது, “உறுப்பினர்கள் அவையில் பேசும்போது மிகுந்த எச்சரிக்கை யுடன் பேசவேண்டும். அவையில் மரியாதைக் குறைவாக பேசிவிட்டு அந்த வார்த்தைகளை நீக்குங்கள். இந்த வார்த்தைகளை நீக்குங்கள் என்று கூறுவது சுலபம். ஆனால் ஏன் அவைக் குறிப்பிலிருந்து வார்த்தையை நீக்குங்கள் என்ற வாக்கியம் எழவேண்டும்? அவைக் குறிப்புகள் தற்போது அனைவரும் பார்வையிடும் வகையில் இருக் கின்றன. எனவே அனைவரும் நாடாளுமன்றத்தின் கண்ணியத் தைக் காக்கும் வகையில் பேச வேண்டும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்” என்றார். இத் துடன் இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்தது. - பிடிஐ

SCROLL FOR NEXT