புதுடெல்லி
மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பங்கீட்டு பிரச்சினைக்கு உடன டியாக தீர்வு காண்பதற்காக ஒற்றை தீர்ப்பாயம் அமைப்பது தொடர் பான மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகா வத், மாநிலங்களுக்கிடையிலான நதி நீர் பிரச்சினைகள் (திருத்த) மசோதாவை மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். பின்னர் அவர் பேசும்போது, “மாநிலங் களுக்கிடையிலான நதி நீர் பிரச் சினைக்கு தீர்வு காண்பதற்காக 9 (தனி) தீர்ப்பாயங்கள் உள்ளன. இதில் 4 தீர்ப்பாயங்கள் தங்கள் தீர்ப்பை வழங்க 10 முதல் 28 ஆண்டு கள் எடுத்துக் கொள்கின்றன. குறித்த காலத்தில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற காலக்கெடு இப்போதைய சட்டத்தில் இல்லை. எனவே, நதி நீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண்பதற்காக ஒற்றை தீர்ப்பாயம் அமைக்க வகை செய்யும் மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இதை நிறை வேற்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்” என்றார்.
முன்னதாக, இந்த மசோதா வுக்கு மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பிஜு ஜனதா தளம் உறுப்பினர் பி.மஹதாப், திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த னர். இந்த மசோதா குறித்து மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்க வில்லை என்றும் அவசரகதியில் தாக்கல் செய்யப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
ஆனால், இதுகுறித்து 2013-ம் ஆண்டிலேயே மாநில அரசுகளு டன் ஆலோசனை நடத்தி, 2017-ல் மசோதா தாக்கல் செய்ததாக அமைச்சர் தெரிவித்தார். அந்த மசோதா நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலை யில், மக்களவை பதவிக்காலம் முடிந்ததும் அது காலாவதியாகி விட்டதால் புதிய மசோதா தாக்கல் செய்யப்படுவதாகவும் அவர் தெரி வித்தார். இதையடுத்து எதிர்க்கட்சி யினரின் எதிர்ப்பையும் மீறி இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
புதிய மசோதாவின்படி ஒற்றை தீர்ப்பாயத்தின் கீழ் பல அமர்வுகள் இடம்பெறும். ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி இதன் தலைவராக இருப்பார். பிர்சினைக்கு தீர்வு காண்பதற்கான காலக்கெடு நிர்ண யிக்கப்படும்.
இப்போதைய சட்டப்படி, நதி நீர் பிரச்சினை தொடர்பாக மாநில அரசு களின் கோரிக்கை அடிப்படையில் தீர்ப்பாயங்கள் (நடுவர் மன்றம்) அமைக்கப்படுகின்றன. இப்போது, காவிரி, வன்சதாரா மற்றும் கிருஷ்ணா உட்பட மொத்தம் 9 தீர்ப்பாயங்கள் உள்ளன.