இரா.வினோத்
பெங்களூரு
அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா மீது கர்நாடக சட்டப்பேரவைத் தலைவர் முடிவெடுக்காததால், பாஜக ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இதனால் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தலாமா? என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தி யுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமை யிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசு தோல்வி அடைந்தது. இதனால் 105 உறுப் பினர்களுடன் பெரும்பான்மை பெற்றுள்ள பாஜக 2 சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க திட்டமிட்டது. ஆளுநர் வாஜூபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவும் நேரம் கேட் கப்பட்டது. எனவே பாஜக மாநில தலைவர் எடியூரப்பா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார் என உறுதியான தகவல் கள் வெளியாகின. ஆனால் புதன்கிழமை மாலை வரை பாஜக மேலிடத்தின் அனுமதி கிடைக்காததால், எடியூரப்பா அதிர்ச்சி அடைந்தார்.
இந்நிலையில், புதன்கிழமை இரவு பாஜக தலைவரும், உள்துறை அமைச்சரு மான அமித் ஷா கர்நாடக பாஜக முன் னாள் தலைவரும், மத்திய அமைச்சரு மான பிரஹலாத் ஜோஷி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அந்த சந்திப் பின் போது கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்கலாமா? சட்டப்பேரவையை கலைத்துவிட்டு மீண்டும் தேர்தலை சந் திக்கலாமா? என ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
அப்போது சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ் குமார், அதிருப்தி எம்எல்ஏக் களின் ராஜினாமாவை ஏற்பாரா? அல்லது அவர்கள் அனைவரையும் தகுதி நீக்கம் செய்வாரா? என சரியாக தெரியவில்லை.
இந்த சூழ்நிலையில் பாஜக ஆட்சி அமைப்பது சரியான முடிவாக இருக்காது. ஒருவேளை அதிருப்தி எம்எல்ஏக்கள் மனம் மாறி, மீண்டும் அவைக்கு திரும்பும்பட் சத்தில் பாஜகவுக்கு சிக்கல் ஏற்படும். ஏற் கெனவே கட்சி மாறியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்களை நம்பி ஆட்சி அமைப்பது சிக்கலாக மாற வாய்ப்பு உள்ளது. எனவே கர்நாடகாவில் குடியரசு தலைவர் ஆட் சியை கொண்டு வரலாம். குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வருவது சிக்கலாக இருக்காது என ஆலோசித்ததாக தெரிகிறது.
இதற்கிடையில், அமித் ஷாவின் அழைப் பின்பேரில் கர்நாடக பாஜக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், அரவிந்த் லிம்பாவளி, பசவராஜ் பொம்மை, எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா ஆகிய பாஜக தலைவர்கள் டெல்லிக்கு விரைந்துள்ளனர். நேற்று மாலை அமித் ஷா கர்நாடக பாஜக தலைவர்களுடன் குடி யரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்து வதும் குறித்தும், பாஜக ஆட்சி அமைப் பது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
பாஜகவின் விதிமுறைகளின்படி 75 வயதை கடந்தவருக்கு முதல்வர் பதவி வழங்குவதில்லை. இந்நிலையில் 75 வயதை கடந்த எடியூரப்பாவை மீண்டும் முதல்வராக ஆக்கலாமா? என பல்வேறு கோணங்களில் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
இந்த சந்திப்பிலும் முடிவு எடுக்கப்படாத தால் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்த எடியூரப்பா, "நல்ல செய்திக்காக காத் திருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
அரசு இயந்திரம் முடங்கும் அபாயம்
இதனிடையே பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிருப்தி எம்எல்ஏக்களை நேரில் சந்தித்து பேசிய பிறகே ராஜினாமா குறித்து முடிவெடுப்பேன். என்னை சந்திக்க அதிருப்தி எம்எல்ஏக்கள் 4 வார கால அவகாசம் கோரியுள்ளனர். வருகிற 31-ம் தேதிக்குள் நிதி நிலை அறிக்கைக்கு, அவையை கூட்டி ஒப்புதல் பெற்றால்தான் அரசு இயந்திரம் முறையாக செயல்பட முடியும். இல்லையென்றால் அரசு ஊழியர் களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை உருவாகும். அரசு இயந்திரம் முற்றிலும் முடங்கி விடவும் வாய்ப்பு உள்ளது'' என்றார்.