சுபாஷ் சந்திர கார்க் :கோப்புப்படம் 
இந்தியா

இடமாற்றத்தால் அதிருப்தி: நிதித்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் விருப்ப ஓய்வு?

செய்திப்பிரிவு

புதுடெல்லி,

நிதிஅமைச்சகத்தில் செயலாளராக இருந்த சுபாஷ் சந்திர கார்க், மின்சக்தி அமைச்சகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டவுடன் அதிருப்தி அடைந்த அவர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 
ஆனால், சுபாஷ் கார்க் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளாரா என்பதுகுறித்த உறுதியான தகவல்கள் ஏதும் இல்லை. 
ஒருவேளை சுபாஷ் கார்க்கின் விருப்ப ஓய்வு மனுவை அரசு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் தனது பதவிக்காலம் முடிய ஒரு ஆண்டுக்கு முன்ப அவர் சென்றுவிடுவார். சுபாஷ் கார்க்கின்  பதவிக்காலம் 2020, அக்டோபர் 31-ம் தேதி வரை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் கடந்த 2000ம் ஆண்டில் வாஜ்பாய் அரசியல் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளராக இருந்த இஏஎஸ் சர்மாவை இதுபோன்று நிலக்கரித்துறை அமைச்சகத்துக்கு அரசு மாற்றியது. தனது இடமாற்றத்தால் அதிருப்தி அடைந்த சர்மா, தான் ஓய்வு பெற 2 அண்டுகள் இருக்கும் போதே விருப்ப ஓய்வு அறிவித்தார். 
பொதுவாக நிதித்துறை செயலாளராக இருப்பவர்கள், நடாளுமன்றத்தில் உள்ள ரெய்சினா பிளாக்கில் உள்ள அமைச்சகங்களுக்கு இடமாற்றம் செய்தால் மட்டுமே ஏற்றுக்கொள்கிறார்கள். அதாவது, பாதுகாப்பு துறை, வெளியுறவுத்துறை, அல்லது அரசமைப்புப்பதவி, தேர்தல் ஆணையம், நிதித்துறை ஆணையம் ஆகிய பதவிகளுக்குச் செல்ல விரும்புகிறார்கள். வேறு ஏதாவது துறைக்கு மாற்றும் போது விருப்ப ஓய்வு அளிப்பது வழக்கமாகி வருகிறது.
நிதித்துறை செயலாளராக இருந்த சுபாஷ் சந்திர கார்க் மிகுந்த அதிகாரம் மிக்க பதவி, இங்கிருந்து மின்சக்தி அமைச்சகத்தின் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டது அதைக் காட்டிலும் அதிகாரம் குறைந்த பதவியாகும். 
நிதித்துறை செயலாளர் பதவி என்பது, நாட்டின் நிதிக்கொள்கைக்கு பொறுப்பாக இருப்பது, ரிசர்வ் வங்கி தொடர்பான விவகாரங்கள், மத்திய பட்ஜெட்டை தயாரிப்பதில் முக்கிய பங்கு வகித்தல் போன்ற அதிகாரம் மிக்க பணிகளில் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
சுபாஷ் கார்க் இடம்மாற்றம் செய்யப்பட்ட இடத்தில், அதானு சக்ரவர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். 
கடந்த 1983-ம் ஆண்டு ராஜஸ்தான் ஐஏஎஸ் அதிகாரியான சுபாஷ் சந்திர கார்க், மத்திய அரசு பணிக்கு கடந்த 2014-ம் ஆண்டு வந்தார். 2017-ம் ஆண்டுவரை உலக வங்கியில் நிர்வாக இயக்குநராகவும், 2018- டிசம்பர் மாதம், ஹஸ்முக் ஆதியா சென்றபின், நிதித் துறை செயலாளர கார்க் நியமிக்கப்பட்டார்.

-பிடிஐ

SCROLL FOR NEXT