புதுடெல்லி
பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றியும், புதிய ஆளுநர்களை நியமித்தும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
‘‘மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் உத்தரப் பிரதேச மாநில புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.மேற்கு வங்காள மாநிலத்தின் புதிய ஆளுநராக ஜெகதீப் தன்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிஹார் மாநில ஆளுநர் லால் ஜி டாண்டன் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிஹார் புதிய ஆளுநராக பாஹு சவுஹான் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாகலாந்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி, திரிபுரா மாநிலத்தின் புதிய ஆளுநராக ரமேஷ் பயஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.