இந்தியா

நிலவில் கால்பதித்து 50 ஆண்டுகள் நிறைவு: வீடியோ டூடுல் போட்டு கவுரவப்படுத்திய கூகுள்

செய்திப்பிரிவு

மனிதன் நிலவில் கால்பதித்து 50 ஆண்டுகள் நிறைவானதை ஒட்டி கூகுள் நிறுவனம் வீடியோ வடிவில் டூடுல் போட்டு சிறப்பித்துள்ளது.
இந்த வீடியோவுக்கான தமிழ் சப் டைட்டிலை பேச்சு வழக்கில் எழுத்துப்பிழை ஏதுமில்லாமல் கொடுத்திருப்பது மிகச் சிறப்பானதாக அமைந்துள்ளது. 

1969 ஆம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி நீல் ஆம்ஸ்ட்ராங்கும், எட்வின் ஆல்ட்ரினும் நிலவில் கால் பதித்தனர். அன்று எழுதப்பட்ட வரலாற்றைக் கொண்டாடும் வகையில்தான் கூகுள் இந்த சிறப்பு வீடியோ டூடுலை வெளியிட்டுள்ளது.

நிலவுப் பயணம் ஒரு குறு வரலாறு..

1969-ம் ஆண்டு, ஜூலை மாதம் 16-ம் தேதி, அப்பல்லோ 11 என்ற விண்வௌி ஓடத்தை அமெரிக்கா ஏவியது. நிலவில் இறங்கும் இந்தத் திட்டத்தில் கட்டளை அதிகாரியாக நீல் ஆம்ஸ்ட்ராங்கும், கட்டளை விமானியாக மைக்கேல் காலின்ஸும், எட்வின் ஆல்ட்ரினும் சென்றனர்.
நான்கு நாட்கள் பயணத்துப் பின்னர் அந்த விண்வௌி ஓடம் ஜூலை 20-ம் தேதி நிலவில் இறங்கியது.

மைக்கேல் காலின்ஸ் விண்வெளி ஓடத்திலேயே தங்கிக்கொள்ள, நீல் ஆம்ஸ்ட்ராங்கும், ஆல்ட்ரினும் 'ஈகிள்' எனும் சிறிய ரக ஓடத்தில் நிலவில் ஜூலை 20 -ம் தேதி இறங்கினர். நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்ததன் மூலம் நிலவுக்குச் சென்ற முதல் மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.

காலின்ஸின் குரலில் வீடியோ...

இந்த வரலாற்று நிகழ்வை சிறப்பிது கூகுல் வெளியிட்டுள்ள டூடுல் வீடியோ மைக் காலின்ஸின் குரலில் ஒலிக்கிறது. தங்களது பயணம் குறித்து அவரே விவரிக்கும்படி அமைந்துள்ளது. பின்னணியில் நிலவுப் பயணத்தை விவரிக்கும் கிராஃபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

"நான் மைக் காலின்ஸ் அப்போலோ 11-ன் விண்வெளி வீரர். 50 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சாகசப் பயணத்தில் நானும் நீல் ஆம்ஸ்ட்ராங் உடன் பஸ் ஆல்ட்ரினுடன் நிலவுக்குச் சென்றோம்... எனத் தொடங்கும் அந்த வீடியோ அப்போலோ 11-ல் இருந்து காலின்ஸ் பேசுகிறேன் என்பதோடு நிறைவடைகிறது.

நிலவில் கால் பதித்த ஆம்ஸ்ட்ராங், இது மனிதன் எடுத்துவைத்து சிறிய தடம்தான் ஆனால் மனித இனத்தின் மிகப்பெரிய சாதனை என்று கூறியிருந்த வார்த்தைகள் நினைவுகூரத்தக்கது.

தமிழ் சப்டைட்டிலுடன் கூடிய வீடியோவுக்கான இணைப்பு..

SCROLL FOR NEXT