இந்தியா

தோற்றது ஏன்? சிரஞ்சீவி விளக்கம்

செய்திப்பிரிவு

தனது தம்பியும் நடிகருமான பவன் கல்யாண் பிரச்சாரத் தினால் காங்கிரஸ் தோற்கவில்லை, நாடு முழுவதும் காங்கிரஸுக்கு எதிரான அலை வீசியது, அதுவே தோல்விக்கு காரணம் என முன்னாள் மத்திய அமைச்சரும் நடிகருமான சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

ஹைதராபாதில் நிருபர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியதாவது:

மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலை வீசியது. இதன் காரணமாகவே ஆந்திரா விலும் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.

நடிகர் பவன் கல்யாண் பா.ஜ.க. -தெலுங்கு தேசம் கூட்டணிக்கு ஆதரவாகவும் காங்கிரஸுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்ததால் காங் கிரஸ் தோல்வியை சந்திக்க வில்லை. முதல்வராக பதவி யேற்க உள்ள சந்திரபாபு நாயுடு மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

தான் முதல்வராக பதவியேற்றதும் விவசாய வங்கிக் கடன் தள்ளுபடி மீது தான் முதல் கையெழுத்து என வாக்குறுதி அளித்துள்ளார். அதனை அவர் நிறைவேற்ற வேண்டும். ஆந்திர பகுதிகளில் மட்டும் சுமார் 80 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 80 ஆயிரம் கோடிக்கு மேல் தள்ளுபடி செய்ய வேண்டி உள்ளது.

இவ்வாறு சிரஞ்சீவி தெரிவித்தார்.

பேட்டியின்போது சீமாந்திரா மாநில காங்கிரஸ் தலைவர் ரகுவீரா ரெட்டியும் உடன் இருந்தார்.

SCROLL FOR NEXT