வியாபம் ஊழல் வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளதை பாஜக வரவேற் றுள்ளது.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நலின் கோஹ்லி நேற்று கூறியதாவது:
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வரவேற்கத்தக்கது. சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பதுதான் பாஜகவின் கருத்து. சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் காலம் தாழ்த்தியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. அதை காங்கிரஸ் நிறுத்தி கொள்ள வேண் டும். சிறப்பு குழு விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணித்து வந்தது.மேலும், சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தது.
இப்போது, சிபிஐ விசாரணைக்கு ஆட்சேபனை இல்லை என்று கூறிய மத்தியப் பிரதேச மாநில அரசை உச்ச நீதிமன்றமே பாராட்டி உள்ளது. இவ்வாறு நலின் கோஹ்லி கூறினார்.
மற்றொரு பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் உசைன் கூறுகையில், “உச்ச நீதிமன்ற உத்தரவு வெளிவந்துவிட்டதால், இனிமேலாவது இதை அரசியலாக் குவதை காங்கிரஸ் நிறுத்தி கொள்ள வேண்டும். காங்கிரஸ் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும். சிபிஐ விசாரணை நடக்கட்டும். உண்மை வெளிவரும்’’ என்றார்.