புதுடெல்லி
குல்பூஷண் ஜாதவை பாகிஸ்தான் அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தி உள்ளார்.
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் (49). உளவு பார்த்ததாகக் கூறி, 2016-ம் ஆண்டு பாகிஸ்தான் அரசு அவரை கைது செய்தது. அவர் மீதான வழக்கை அவசரமாக விசாரித்த பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
ஆனால், கடற்படையில் இருந்து ஓய்வு பெற்ற ஜாதவ், ஈரானில் வர்த்தகம் செய்துவந்த நிலையில் அவர் பாகிஸ்தானால் கடத்தப்பட் டார் என்று இந்தியா குற்றம்சாட்டி உள்ளது.
மேலும் குல்பூஷணுக்கு பாகிஸ் தான் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை எதிர்த்து நெதர்லாந் தில் தி ஹேக் நகரில் உள்ள சர்வ தேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சர்வதேச நீதி மன்றம், குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்திவைத்து நேற்று முன்தினம் உத்தரவிட்டது. தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நேற்று ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில், “பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண் ஜாதவை சந்திக்கவும் அவர் சார் பில் வாதாடவும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கவில்லை. இது வியன்னா உடன்படிக்கைக்கு எதி ரானது என சர்வதேச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், அவரது மரண தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது.
பாகிஸ்தான் அரசு ஜாதவ் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி மரண தண்டனை விதித் துள்ளது. எனவே, பாகிஸ்தான் அரசு அவரை உடனடியாக விடுதலை செய்து இந்தியாவுக்கு நாடுகடத்த வேண்டும். அவரை இந்தியாவுக்கு அழைத்துவர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்.
இந்த வழக்கில் இந்தியா சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேக்கு பாராட்டுகள். மேலும் இதுபோன்ற கடினமான சூழலில் ஜாதவ் குடும்பத்தினரின் துணிவும் பாராட்டுக்குரியதாக உள்ளது” என கூறப்பட்டுள்ளது.
கொள்கை மாறாது
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது, காங்கிரஸ் உறுப் பினர் அம்பி சோனி, “இந்திய தூதரக அதிகாரியாக இருந்த ஜெய்சங்கர் அத்துறையின் அமைச்சராகிவிட்ட நிலையில், சீனா குறித்த அவரது கருத்து மாறிவிட்டதா” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளிக்கும் வகை யில் ஜெய்சங்கர் பேசும்போது, “அமைச்சராக இருந்தாலும், தூதரக அதிகாரியாக இருந்தாலும் அரசின் கொள்கையைப் பின்பற்ற வேண்டியது நமது கடமை. சீனா மீதான கொள்கையைப் பொருத்த வரை, வேறுபாட்டைவிட நிலைத் தன்மைதான் முக்கியம் என்று நான் கருதுகிறேன்” என்றார். - பிடிஐ