இந்தியா

மாயாவதியின் சகோதரர் பெயரில் ரூ .400 கோடி 'பினாமி' சொத்து: வருவாய்த்துறை பறிமுதல்

செய்திப்பிரிவு

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியின் சகோதரர் பெயரில் உள்ள பினாமி சொத்து ரூ.400 கோடிமதிப்புள்ள நிலத்தை வருவாய்ததுறை இன்று பறிமுதல் செய்துள்ளது. 

உத்தரப் பிரதேசம் நொய்டாவில் உபியின் முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதியின் சகோதரர் ஆனந்த் குமார் என்பவரின் பெயரில் ரூ.400 கோடி அளவில் பினாமி பெயரில் சொத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இச்சொத்தை தற்போது அனுபவித்து வரும் ஆனந்த்குமார் மற்றும் அவரது மனைவி விச்சிட்டர் லதா ஆகியோரிடம் பறிமுதல் உத்தரவை டெல்லியில் உள்ள வருவாய்த்துறையின் பினாமி தடுப்புச் சட்டப் பிரிவு அதிகாரிகள் இன்று (வியாழக்கிழமை) வழங்கினர். 

மாயாவதி சமீபத்தில் குமாரை பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய துணைத் தலைவராக நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT