இந்தியா

திருப்பதியில் விஐபி பிரேக் தரிசன முறையில் மாற்றம்: திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் தகவல்

செய்திப்பிரிவு

என். மகேஷ்குமார்

திருப்பதி

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்யும் விஐபி பிரேக் முறையில் தேவஸ்தானம் சில மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ளதாக நேற்று இந்த தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திருமலையில் உள்ள அன்ன மைய்யா பவனில் நேற்று அறங் காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கும் விதத்தில் விஐபி பிரேக் தரிசனத்தில் லிஸ்ட்-1, லிஸ்ட்-2, லிஸ்ட்-3 எனும் முறையை உடனடியாக தேவஸ் தானம் நீக்குகிறது. இதன் மூலம் சாமானிய பக்தர்களை கூடுதலாக அனுமதிக்கலாம். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசு வந்ததும் இதனை அமல்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு பதிலாக பழைய முறையை அமல்படுத்தும் திட்டமும் உள்ளது. அதாவது, அர்ச்சனைக்கு பின் “அர்ச்சனை அனந்தர தரிசனம்” எனும் பழைய முறையை அமல்படுத்தலாம் என ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து இன்னமும் ஓரிரு நாட்களில் திட்ட வட்ட அறிவிப்பு வெளியிடப்படும் என அறங் காவலர் குழு தலைவர் கூறினார்.

பூ பல்லக்கு சேவை

திருமலையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் ஆனி மாதம் நிறைவடைந்த பின்னர், ஆடி மாதம் 1-ம் தேதி ‘ஆனி வரை ஆஸ்தானம்’ எனும் விழா நடத் துவது ஐதீகம். இதுவே மருவி ஆனி வார ஆஸ்தானம் ஆனது. இந்த நாளில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பட்டு உடுத்தி, சிறப்பு நைவேத்தியங்கள் படைப் பார்கள். அதன் பின்னர், உற்சவ ரான மலையப்ப சுவாமியை, தங்க வாசல் அருகே நிற்க வைப்பார்கள். இவரது முன்னிலையில், ஆண்டு வரவு செலவு கணக்குகள் ஒப் படைக்கப்படும். அவ்விதம் கணக்கு ஒப்படைக்கப்பட்டது. பின்னர் நேற்றிரவு உற்சவ மூர்த்தி களான ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்பருக்கு பூபல்லக்கு சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT