இந்தியா

‘‘ரொட்டியும் சப்ஜியும் மட்டும் உங்களுக்கு உலக கோப்பையை பெற்று தராது’’ - நாடாளுமன்றத்தில் திரிணமூல் எம்.பி. ஆவேசம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி

ரொட்டியும் சப்ஜியும் மட்டும் உங்களுக்கு உலக கோப்பையை பெற்று தராது என நாடாளுமன்றத்தில் திரிணமூல் எம்.பி. பிரசூன் பானர்ஜி பேசினார்.

மேற்குவங்க மாநிலம் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. பிரசூன் பானர்ஜி முன்னாள் கால்பந்து விளையாட்டு வீரர். அர்ஜூன விருது பெற்ற அவர் பல்வேறு விளையாட்டு துறை சார்ந்த விருதுகளை பெற்றுள்ளார். மக்களவையில் இன்று அவர் விளையாட்டு துறை சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து பேசினார்.

அவர் பேசியதாவது:

தேசிய விளையாட்டு கல்வி வாரியம் அமைப்பதை வரவேற்கிறோம். அதேசமயம் நாடுமுழுவதும் உள்ள பல்வேறு விளையாட்டு அமைப்புகள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாத சூழல் உள்ளது. விளையாட்டை ஊக்குவிக்கும் திட்டம் இல்லை. கொள்கை திட்டங்களை உருவாக்குபவர்களிடையே இதுபற்றிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம்.

கால்பந்து கண்காணிப்பு ஆணையத்தின் செயல்பாடுகளை ஆராய வேண்டும். கால்பந்து விளையாட்டை அழிப்பதையே அந்த ஆணையம் செயல் திட்டமாக வைத்துள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஆனால் இதுபோன்ற அரசு அமைப்புகளுக்கு தான் நிதி தரப்படுகிறது. விளையாட்டு வீரர்களுக்கு நிதி தரப்படவில்லை. வெறும் ரொட்டியும், சப்ஜியும் மட்டும் உலக கோப்பையை பெற்று தராது.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT