இந்தியா

அமர்நாத் யாத்ரீகர்கள் 4 பேர் மாரடைப்பால் மரணம்

பிடிஐ

காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் 4 பேர் மாரடைப்பால் இறந்ததை தொடர்ந்து, யாத்திரையில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் நேற்று கூறும்போது, “டெல்லியை சேர்ந்த சத்பால் காக்யால் (47) என்பவர் வெள்ளிக்கிழமை மாலை பாரம்பரிய பஹல்காம் வழிப் பாதையில் பஞ்சதாரணி என்ற இடத்தில் இறந்தார். இதுபோல் பஞ்சாபைச் சேர்ந்த அமன்தீப் (29) என்பவர் குகைக் கோயில் அருகிலும், மணிப்பூரைச் சேர்ந்த ராம் அவதார் (60) பஞ்சதாரணி முகாமிலும், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பானுதாஸ் என்பவர் பல்தலிலும் இறந்தனர். இவர்கள் அனைவருமே மாரடைப்பால் உயிரிழந்தனர்” என்றனர்.

சமீபத்திய இந்த மரணங்களால், கடந்த 2-ம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரையில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களில் சிஆர்பிஎப் வீரர் ஒருவரும் அடங்குவார்.

தெற்கு காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை இந்த ஆண்டில் இதுவரை 2.40 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

வியாழக்கிழமை இரவு பெய்த கனமழையால் மூடப்பட்ட பல்தல் பாதை நேற்று மீண்டும் திறக்கப் பட்டது. இதனால் பல்தல், பஹல் காம் ஆகிய இரு வழிகளிலும் பக்தர்கள் நேற்று யாத்திரை மேற்கொண்டனர்.

SCROLL FOR NEXT